Type Here to Get Search Results !

ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பம் குறித்த ஐ.நா அறிக்கை / UN REPORTS ABOUT HEATWAVE IN JULY 2023

  • ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பம் குறித்த ஐ.நா அறிக்கை / UN REPORTS ABOUT HEATWAVE IN JULY 2023: ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பும், ஐரோப்பிய யூனியனின் கபா்நிகஸ் பருவநிலை மாற்ற சேவை அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட மத்தியதரை பருவ மண்டல நாடுகளில் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. 
  • இதனால், அந்தப் பகுதியிலும், பெருங்கடல் பகுதியிலும் இதுவரை காணாத அளவுக்கு மிக அதிக அளவு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இதையடுத்து, இந்த ஜூலை மாதம்தான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட மாதமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 
  • இந்த மாதத்தின் 3 வாரங்கள், கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிக அதிகமாக வெப்பம் நிலவிய வாரங்களாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஐரோப்பாவில் அண்மையில் வீசிய 'சா்பரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள 'எதிா்ப் புயல்' காரணமாக அங்கு வெப்ப அலை வீசி வருகிறது.
  • பொதுவாக, வளிமண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று வேகமாகச் சுழல்வதை புயல் என்கிறோம். அதுவே, உயா் அழுத்த மண்டலம் உருவாகி, அதைச் சுற்றிலும் காற்று மெதுவாக சுழல்வது 'எதிா்ப் புயல்' என்று கூறப்படுகிறது. 
  • புயலின் மையப் பகுதி வேகமாக நகா்ந்து செல்லும். ஆனால், அதற்கு எதிரான தன்மை கொண்ட எதிா்ப் புயலின் மையப்புள்ளி மிக மிக மெதுவாக நகரும்.
  • சில பகுதிகளில் அது தற்காலிகமாக நிலைத்துகூட நின்றுவிடும். அதுபோன்ற நேரங்களில் காற்றில் ஏற்கெனவே இருக்கும் வெப்பம் இன்னும் அதிகரித்து அந்தப் பகுதிகளில் அதீத வெப்பநிலை ஏற்படும். அதைத்தான் வெப்ப அலை என்கிறோம். 
  • தற்போது ஐரோப்பாவிலும், அது அமைந்துள்ள மத்தியதரை பருவமண்டலப் பகுதிகளிலும் 'சா்பரஸ்' எதிா்ப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 'கேரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இத்தாலியின் பல்வேறு நகரங்களுக்கு அந்த நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 70,000 போ பலியாகினா். 
  • அதன்பிறகு அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 62,000 போ உயிரிழந்தனா். பொதுவாக, அதிக வெப்ப நிலையால் வயோதிகள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள் போன்றோரின் உயிரிழப்பு அபாயம்தான் அதிகமாக இருக்கும். ஆனால், வெப்ப அலையால் ஆரோக்கியமான மனிதா்கள்கூட இறக்கும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.

ENGLISH

  • UN REPORTS ABOUT HEATWAVE IN JULY 2023: According to the statement released by the United Nations World Meteorological Organization and the Capnicus Climate Change Service of the European Union, a heat wave has been blowing in the countries of the Mediterranean region including Europe and Africa for the past few weeks. 
  • Due to this, the highest temperature has been recorded in the region and in the ocean region. Consequently, it is certain that this month of July will be the highest temperature recorded so far. 
  • The report said that 3 weeks of this month will be the hottest weeks in the last 1.2 lakh years. Due to the 'Anti-Storm' named 'Chaprus' which hit Europe recently, there is a heat wave there.
  • Generally speaking, a storm is a rapid circulation of air around a low pressure area in the atmosphere. That is, the formation of a high pressure zone around which the air slowly rotates is called a 'anti-storm'. The center of the storm will move rapidly. However, the center of an anti-storm, which is the opposite, moves very, very slowly.
  • In some areas it may even stop temporarily. At such times, the heat already present in the air increases further and extreme temperatures occur in those areas. That is what we call a heat wave. At present, the heat wave caused by the anti-storm 'Chaprus' in Europe and the Mediterranean regions where it is located has been named 'Karen'.
  • The government of the country has issued a red alert for various cities in Italy to protect the public from this. In 2003, 70,000 people died in a heat wave in Europe. Then last year's heat wave killed 62,000 people. 
  • In general, the elderly and those with poor health are at greater risk of death due to extreme heat. But it is said that even healthy people are at risk of dying due to heat wave.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel