Type Here to Get Search Results !

29th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தில்லி பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் 
  • தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 3 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறுகிறது. 
  • பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியையும் அவர் விடுவித்தார். 6207 பள்ளிகளுக்கு முதல் தவணையாக ரூ.630 கோடி வழங்கப்பட்டது.
  • 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
  • ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜூலை 30 காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன. 
  • ராக்கெட்டானது பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப வெப்ப மாற்றங்களை ஆராயவும் ராக்கெட் பயன்படும்.
பிஸு உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் 2023
  • சீனாவின் செங்டு பகுதியில் `பிஸு' உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளை இளவேனில் வாலறிவன் எடுத்து முதலிடம் பெற்றார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
  • இதேபோல் மகளிர் அணிப் பிரிவில் மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால், அபிந்த்யா பாட்டீல் ஆகியோர் அடங்கிய அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. 
  • இதே பிரிவில் சீன அணியினர் வெள்ளியையும், ஈரான் அணியினர் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.
  • மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் தங்கம் வென்றார். இதே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை ஃபேபியன் சாரா வெள்ளியையும், சீன தைபே வீராங்கனை யு-ஜு ஜென் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel