Type Here to Get Search Results !

28th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

குஜராத்தின் காந்திநகரில் செமிகான்இந்தியா 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
  • குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
  • குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள் 'இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல்' என்பதாகும். தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • குறைகடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் குறைகடத்தி உத்தி மற்றும் கொள்கையை இது வெளிப்படுத்துகிறது.
இந்தியா, வங்கதேசம், மொரீஷியஸ் நாடுகளின் கடல் விஞ்ஞானிகள் குழுவின் கூட்டுப் பயணம் வெற்றிகரமாக நிறைவு
  • இந்தியா, வங்கதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடல் விஞ்ஞானிகளின் கூட்டுப் பயணம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையத்தால் (இன்கோயிஸ்) கொழும்பு பாதுகாப்பு உச்சிமாநாட்டின் (சி.எஸ்.சி) பிராந்திய கட்டமைப்பின் கீழ் ஜூலை 24, 2023 அன்று நிறைவடைந்தது. 
  • இந்தியப் பெருங்கடலின் பிராந்திய சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பது, நிர்வகிப்பது, கடல் தரவுகளைச் சேகரிப்பது ஆகியவற்றுடன், கடல் கண்காணிப்பு மற்றும் சேவைகளில் திறனை உருவாக்குவதே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.
  • சி.எஸ்.சி கட்டமைப்பின் கீழ் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஓ.ஆர்.வி சாகர் நிதி கப்பலின் பயணம் தனித்துவமானதாக இருந்தது. இதில் பங்கேற்பாளர்கள் கடல் அளவுருக்களை அளவிடுதல் மற்றும் மாதிரியாக்குதல் போன்ற கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
  • பிராந்தியத்தில் உள்ள அனைவரின் பொதுவான நன்மைக்காக மேம்பட்ட முன்னறிவிப்பு மற்றும் சேவைகளுக்கு வழிவகுக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.
  • கடந்த நவம்பர் 2022 இல் கோவா மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற சி.எஸ்.சி கடலியல் வல்லுநர்கள் மற்றும் ஹைட்ரோகிராஃபர்களின் முதல் கூட்டுமுயற்சியின் விளைவாக ஜூன் 29, 2023 அன்று தொடங்கிய ஓ.ஆர்.வி சாகர் நிதி கப்பலின் பயணம் அமைந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது
  • ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் தலைமையிலான செஸ் கூட்டமைப்பினர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
  • அப்போது, அந்த அமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் சிறந்த மனிதருக்கான விருதை முதலமைச்சருக்கு வழங்கினர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்த விருது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட ஹாக்கி ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது.
  • இப்போட்டியில் ஆசியாவை சேர்ந்த இந்தியா சீனா பாகிஸ்தான், மலேசிய ஜப்பான், மற்றும் தென் கொரிய ஆகிய 45 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
  • மேலும், சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம். வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் உதயநிதியின் மகன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • முன்னதாக, ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ராஜஸ்தானில் நகர்ப்புற சேவைகளை விரிவுபடுத்த 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன
  • குடி நீர் வழங்கல் நடைமுறைகளை விரிவுபடுத்தவும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நகர்ப்புற மீட்சித் திறன் மற்றும் பாரம்பரிய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நடந்து வரும் ராஜஸ்தான் இரண்டாம் நிலை நகரங்கள் மேம்பாட்டுத் துறை திட்டத்திற்கு கூடுதல் நிதியாக 200 மில்லியன் டாலர் கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ஏடிபி) இன்று கையெழுத்திட்டன.
  • இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு உம்லுன்மங் உல்னம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கான ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குநர் டகோ கோனிஷி ஆகியோர் கடன் இந்தக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel