வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 / FOREST CONSERVATION AMENDMENT BILL 2023
TNPSCSHOUTERSJuly 29, 2023
0
வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 / FOREST CONSERVATION AMENDMENT BILL 2023: இந்தியாவின் காடுகளைப் பாதுகாப்பதற்காக 1980இல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டம், காட்டு வளங்களைத் தொழில் நிறுவனங்களும் காடுகளில் வாழும் சமூகங்களும் தமது பயன்பாட்டுக்காகப் பிரித்தெடுப்பதை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
1951இலிருந்து 1975க்குள் கிட்டத்தட்ட 40 லட்சம் ஹெக்டேர் காட்டு நிலங்கள் காடு சாராத நோக்கங்களுக்காக மடைமாற்றப்பட்டிருந்தன. வனப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்குவந்தது முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இது 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
காட்டு நிலங்கள் பிற பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதை இந்தச் சட்டம் கணிசமாகத் தடுத்துள்ளது என்பதற்கு இதுவே சான்று. ஆனால், இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசுகளின் பதிவுகளில் 'காடு' என்று வகைப்படுத்தப்பட்டிருந்த நிலப் பகுதிகளுக்கு மட்டுமே பாதுகாப்பளித்தது.
1996இல் கோதாவர்மன் எதிர் மத்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய நிலத்தின் வரையறையை விரிவுபடுத்தியது.
அதன்படி, 'அதிகாரபூர்வக் காடுகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், 'சொல் அகராதி'யின்படி காடு என்று பொருள் கொள்ளத்தக்க நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகின.
காடு என்பதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வரையறை எதுவும் இல்லை என்பதால், மாநில அரசுகள் தமது அளவுகோல்களைப் பயன்படுத்தி, காடுகளை வரையறை செய்து எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கூறியது.
அனைத்து மாநிலங்களும் இதைப் பின்பற்றவில்லை என்பதால் காடுகளைப் பாதுகாப்பதில் மேற்கூறிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்குப் பங்களித்துள்ளது என்பது விவாதத்துக்குரியதாக இன்றுவரை தொடர்கிறது.
நாட்டின் புவியியல் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என்று 1988இல் வெளியிடப்பட்ட இந்தியாவின் வனக் கொள்கை பரிந்துரைக்கிறது. ஆனால், 21% நிலம் மட்டுமே காட்டுப் பகுதியாக உள்ளது.
காடுகளாகப் பதிவுசெய்யப்பட்ட நிலங்களுக்கு அப்பால் உள்ள மரங்கள் நிறைந்த பகுதிகளையும் பழத்தோட்டங்களையும் சேர்த்தால் 24% வரும். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குத்தான் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கியத் திருத்தங்கள்
வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 / FOREST CONSERVATION AMENDMENT BILL 2023: காடுகளையும் அவற்றின் உயிர்ப்பன்மையையும் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிப்பது ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிடும் வகையிலான முகவுரை இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் பெயர் 'வன் (சம்ரக்ஷண் ஏவம் சம்வர்த்தன்) அதினியம்' என்று மாற்றப்பட்டுள்ளது (வனப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பது இதன் பொருள்).
1980 அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அரசு ஆவணத்தில் 'காடு' என்று அறிவிக்கப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1980இலிருந்து 1996க்குள் காடு என்று அறிவிக்கப்பட்ட நிலம், சட்டப்படி காடு சாராத பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் வனப் பாதுகாப்புச் சட்டம் அதற்குப் பொருந்தாது.
சர்வதேச எல்லையிலிருந்து 100 கி.மீ-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள காட்டு நிலங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வியூகம்சார் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான காட்டு நிலங்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவத் திட்டங்களுக்கான 5-10 ஹெக்டேர் வரையிலான நிலங்களுக்கு இந்தச் சட்டத்தின் நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ENGLISH
FOREST CONSERVATION AMENDMENT BILL 2023: The Forest Conservation Act of 1980, enacted to protect India's forests, empowers the central government to regulate the exploitation of forest resources by industrial companies and forest-dwelling communities for their own use.
Between 1951 and 1975, nearly 40 lakh hectares of forest land was converted to non-forestry purposes. It has come down to 10 lakh hectares between 2023 and 2023 after the Forest Conservation Act comes into force.
This is evidence that the act has significantly prevented forest lands from being taken over for other uses. But this Act protected only the land areas classified as 'Forest' in the records of the Central and State Governments.
In 1996, the Supreme Court judgment in Godavarman v. Central Government expanded the definition of land to be protected under the Forest Protection Act.
Accordingly, not only the areas declared as 'Official Forests', but also all the lands that could be defined as forest according to the 'Dictionary' became to be protected.
The judgment said that since there is no absolute and all-inclusive definition of forest, state governments should use their own criteria to define and delimit forests.
The extent to which the above Supreme Court judgment has contributed to the conservation of forests continues to be a matter of debate as not all states have followed suit.
India's Forest Policy published in 1988 recommends that one-third of the country's geographical area should be covered by forests. However, only 21% of the land is forested.
Adding wooded areas and orchards beyond the land registered as forests comes to 24%. The Union Ministry of Environment has said that amendments are being made to the Forest Protection Act to correct this problem.
Major revisions
FOREST CONSERVATION AMENDMENT BILL 2023: The Bill includes a preamble underscoring India's commitment to protecting forests and their biodiversity and addressing the challenges of climate change.
The name of the Act has been changed to 'Van (samrakshan evam samvarthan) atiniyam' (meaning forest protection and development).
The Act has been amended to apply only to lands declared as 'Forest' in any government document dated 1980 or later.
The Forest Conservation Act does not apply to land declared as forest between 1980 and 1996 if it has been legally taken for non-forest uses.
Forest lands within 100 km of the international border, forest lands for use in strategic projects of national importance, and lands up to 5-10 hectares for defense and military projects are exempted from the provisions of this Act.