Type Here to Get Search Results !

24th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


24th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது இடம் 
  • கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வந்தது. இதன் கடைசி நாளான ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் 544 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • உஸ்பெகிஸ்தானின் வெனியமின் நிகிடின் 542 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் கிம் தமின் 541 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • 50 மீட்டர் பிஸ்டல் ஆடவருக்கான அணிகள் பிரிவில் கமல்ஜீத், அன்கைத் தோமர்,சந்தீப் பிஷ்னோய் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,617 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
  • உஸ்பெகிஸ் தான் அணி 1,613 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி 1,600 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன. மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் டியானா 519 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்த தொடரை இந்திய அணி 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. சீனா 12 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது.
பி.எப்., வட்டி விகிதம் 8.15 சதவீதமாக அறிவிப்பு
  • கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, 8.15 சதவீதமாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, இ.பி.எப்.ஓ., எனப்படும் பணியாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம், தனது 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தனது அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 
  • நடப்பாண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்த வட்டி விகிதத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
  • இதைத் தொடர்ந்து, சந்தாதாரர்களின் கணக்குகளில் உயத்திய வட்டி விகிதத்தை வரவு வைக்கும் செயல்முறைகளை, இ.பி.எப்.ஓ., அலுவலகங்கள் துவக்க உள்ளன. 
  • கடந்த மார்ச் 2022ல், 2021-22ம் ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, முந்தைய ஆண்டான 2020-21ல் வழங்கப்பட்ட 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றம்
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் எலன் மஸ்க்.
  • இவர் கடந்த ஆண்டு முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தை 3.61 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.
  • ஆயிரக்கணக்கான உயரதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பின்பு சிலரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளை குறிக்கும் ப்ளூ டிக்குக்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். டிவிட்டர் லோகோவையும் மாற்றினார். 
  • டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.
  • தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எலான் மஸ்க் 'X' என்று மாற்றினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel