19th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.145 கோடி முதலீட்டில் எஸ்ஓஎல் இந்தியா நிறுவன ஆலை விரிவாக்க பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- ராணிப்பேட்டை- சிப்காட் நிலை 3-ல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- இந்த விரிவாக்கத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 80 டன் என்ற அளவில் உள்ள இதன் உற்பத்தித் திறன், நாளொன்றிற்கு 200 டன் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.
- ‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்கள்’, ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகள்’ ஆகியவற்றுக்கு 2 புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும், தொழில், வர்த்தகத் துறையும் 2023, ஜூலை 14 அன்று அறிவித்துள்ளன.
- இந்தத் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். இந்தத் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் இந்தியாவில் தர நிலைமையை மேம்படுத்துவதுடன் நுகர்வோரின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
- ‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்களைப்’ பொறுத்தவரை உள்நாட்டுச் சந்தையில் தயாரிக்கப்பட்ட அல்லது இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மின்சாரம், ரசாயனம் மற்றும் பொதுப்பயன்பாட்டுப் பொருட்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
- அதேபோல் ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகளைப்’ பொறுத்தவரை உள்நாட்டுச் சந்தையில் தயாரிக்கப்பட்ட அல்லது இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட துருவேறாத எஃகினாலான வேக்கும் குடுவைகள், பாட்டில்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தலுக்கான வெப்பம் தாங்கும் பெட்டிகள் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
- 2000-ம் ஆண்டுகள் பழமைவாய்ந்த படகு கட்டும் முறை' என்று அழைக்கப்படும் படகு கட்டும் நுட்பத்தை புதுப்பிக்கவும் பாதுகாக்கவும், கலாச்சார அமைச்சகமும் இந்திய கடற்படையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- ஜூலை 18, 2023 அன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
- தைக்கப்பட்ட படகு இந்தியாவில் குறிப்பிடத்தக்க கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது, அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய கைவினைத்திறனைப் பாதுகாக்கிறது. வரலாறு முழுவதும், இந்தியா ஒரு வலுவான, கடல்சார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
- இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) 25 வது தலைமை இயக்குநராக திரு ராகேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989-ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார்.
- கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி & ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.
- 34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குநர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் புது தில்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர்.
- இது தவிர, புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குநர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
- ஐ.சி.ஜி.எஸ் சமர்த், ஐ.சி.ஜி.எஸ் விஜித், ஐ.சி.ஜி.எஸ் சுசேதா கிருபளானி, ஐ.சி.ஜி.எஸ் அகல்யாபாய் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.