18th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
- போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
- ரூ. 710 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய முனையக் கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.
- 40,800 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ரூ.80 கோடி மதிப்பீட்டில் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் 2 போயிங் விமானங்கள், 2 ஏர்பஸ் விமானங்கள் இறங்க மற்றும் ஏறும் வகையில் ஓடுபாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும்.
- இயற்கையால் ஊக்குவிக்கப்பட்டு, கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த விமான நிலைய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், பகல் நேரங்களில் மின்விளக்குப் பயன்பாட்டை பெருமளவு குறைத்து சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்கும் வகையிலும், இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
- அதோடு எல்.இ.டி மின் விளக்குகள், வெப்பத்தைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மழைநீரை சேகரிக்க ஏதுவாக பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி, விமான நிலையத்திலேயே 100% முழுமையாக கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆலை, 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி மையம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கான கட்டமைப்புகள் போன்ற எண்ணற்ற நீடித்த மற்றும் நிலையான அம்சங்கள் இந்தப் புதிய விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் - சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை https://mocrefund.crcs.gov.in/ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்.
- நான்கு கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட சஹாரா குழுமத்தின் உண்மையான டெபாசிட்தாரர்கள் உரிமை கோரல்களை சமர்ப்பிப்பதற்காக இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- சஹாரா குழுமத்தில், பணம் செலுத்தி திரும்ப பெற முடியாதவர்களின் கவலையை மனதில்கொண்டு இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- சஹாரா குழும நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் இணையதளம் மூலம் இந்த இணையப்பக்கத்தை அணுகி அதில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- இத்துடன் தேவைப்படும் ஆவணங்களையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிமைகோரல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்பட்டபின், நிதி இருப்பைப் பொறுத்து, உண்மையான டெபாசிட்தாரர்களுக்கு 45 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
- இந்தியா அமெரிக்கா இடையே பசுமை எரிசக்தி கூட்டு முயற்சிகள் தொடர்பான அமைச்சர்கள் அளவிலான கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.
- இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் க்ரான்ஹோம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பேச்சுக்கள் நடத்தினர்.
- இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு இருநாடுகளும் இடையே வளர்ந்து வரும் நிலையில் இருதரப்பு பசுமை எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் எட்டியுள்ள மைல்கற்கள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- எரிசக்தி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி கண்டுபிடுப்புகள், பருவநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலைகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
- மலிவான, நம்பிகைக்கு உகந்த பசுமை எரிசக்தி விநியோகம் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த பேச்சுக்கள் நடைபெற்றன.
- இந்தியாவும் அமெரிக்காவும் இருபெரும் ஜனநாயக நாடுகள் என்பதோடு அளவில் பெரியதும் அதிவேகமாக வளர்ந்து வருவதுமான பொருளாதாரங்களாக திகழ்வதால் இருநாடுகளும் இணைந்து இந்த விவகாரத்தில் கூட்டாக பயணிப்பது இருதரப்பு நலனுக்காக மட்டுமின்றி உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுப்பதாக அமையும் என்று முடிவெடுக்கப்பட்டது.
- பசுமையான மாசற்ற எரிசக்தியை எதிகாலத்தில் எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும், இதற்கான திறன்களை மேம்படுத்துவது எப்படி, ஆய்வகங்கள் வாயிலான ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.