Type Here to Get Search Results !

ஏற்றுமதி தயார் நிலை குறியீடு 2023 / EXPORT READINESS INDEX 2023

  • ஏற்றுமதி தயார் நிலை குறியீடு 2023 / EXPORT READINESS INDEX 2023: நிதிஆயோக்கின் ஏற்றுமதி தயார் நிலை குறியீடு மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தரவரிசையிலும் குஜராத் முதலிடத்தைப் பிடித்திருந்தது.
  • மூன்றாவது பதிப்பான தரவரிசையில் தமிழ்நாடு 80.89 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. மகாராஷ்டிரா 78.20 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்திலும், கர்நாடகா (76.36) மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
  • குஜராத் 73.22 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 5வது ஒடிசா 6வது, மேற்கு வங்கம் 7வது மற்றும் கேரளா 8வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இதில் தமிழகம் ஒட்டுமொத்தமாக 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா(78.20), கர்நாடகா(76.36), குஜராத் (73.22) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • கரோனா பெருந்தொற்றுக்குப் பின், நாட்டின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த காலத்துக்குப்பின் ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்து, மாநிலங்களின் ஏற்றுமதி பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. 
  • மாநிலங்களின் தனித்துவமான முயற்சி மற்றும் அந்தந்த மாநிலங்களின் புவியியல் சார்ந்த சாதக அம்சங்கள், மாநிலங்களிடையிலான போட்டி ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ளது.
  • மாநில அரசுகளின் சுதந்திரமான செயல்பாடு, பிராந்திய ரீதியிலான அணுகுமுறை, தீர்க்கமான முடிவு, மாநில வளங்களில் சாதகமான அம்சங்களை உணர்வது, பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைக் களைவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணைத் தயாரிப்பில் ஒவ்வொரு துறை வாரியான ஏற்றுமதி அளவீடுகள் மதிப்பிடப்பட்டன. இதில் மாநில அரசின் கொள்கை, வர்த்தகத்திற்குரிய சூழல், ஏற்றுமதிஅதிகரிப்புக்கான நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகியன முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. புள்ளிவிவரத் தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த 4 முக்கியக் காரணிகள் தவிர்த்து 10 விதமான துணைக் காரணிகள் அளவீடுகளில் பயன்படுத்தப்பட்டன. ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, நிறுவனங்களின் செயல்பாடு, வணிக சூழல், கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு வசதி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகள், வர்த்தக அதிகரிப்புக்கு மாநில அரசின் உதவி, ஆராய்ச்சி, அபிவிருத்தி கட்டமைப்பு வசதி, ஏற்றுமதிபரவலாக்கல், வளர்ச்சிக்கான வழிமுறைகள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் பெருமளவுகடலோரப் பகுதி உள்ளது சாதக அம்சமாகும். மேலும், சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியக் காரணிகளாகும்.

ENGLISH

  • EXPORT READINESS INDEX 2023: NITI Aayog's Export Readiness Index aims to assess the readiness of each state based on its export capacity and performance. Gujarat topped the last two rankings.
  • In the third edition of the rankings, Tamil Nadu topped the list with a score of 80.89. Maharashtra is second with a score of 78.20 followed by Karnataka (76.36). Gujarat ranked fourth with a score of 73.22, followed by Andhra Pradesh 5th, Odisha 6th, West Bengal 7th and Kerala 8th.
  • In this, Tamil Nadu is at the top with overall 80.89 points. Maharashtra (78.20), Karnataka (76.36) and Gujarat (73.22) are next.
  • After the Corona pandemic, the country's exports have suffered a lot. Niti Aayog has prepared a report on the export contribution of the states after studying the increase in exports after this period. 
  • The Niti Aayog has pointed out that the unique efforts of the states and the geographical advantages of the respective states and inter-state competition are the main reasons for the increase in exports.
  • States and Union Territories have achieved significant development due to measures such as independent functioning of state governments, regional approach, decisive decision making, realizing positive aspects of state resources, analyzing weaknesses and eliminating them.
  • Each sector wise export metrics were assessed in preparation of Export Readiness Index table. In this, state government policy, trade environment, measures to increase exports and export activities were taken into consideration. 56 different factors have been used in the calculations for statistical production.
  • Apart from these 4 main factors 10 different sub-factors were used in the measurements. Export development policy, activities of companies, business environment, infrastructure, transport connectivity, infrastructure for exports, state government assistance for increasing trade, research, development infrastructure, export distribution, development mechanisms were also taken into account.
  • The report pointed out that the performance of states covering coastal areas was better. Thus, Tamil Nadu has a large coastal area which is an advantage. Also, Chennai Port and Thoothukudi Port are major factors for increase in exports.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel