16th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.6,828 கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் வாங்க ஒன்றிய அரசு அனுமதி
- நாட்டில் விமானம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஒன்றிய அரசின் பொதுதுறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உள்ளது.
- பயணிகள் விமானம், போர் விமானம், பயிற்சி விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவைகள் தயாரித்து வருகிறது. இந்திய விமான படையை பலப்படுத்த வேண்டும் என்ற யோசனையில் உள்ள ஒன்றிய அரசு, இந்திய விமான படைக்கு புதியதாக பயிற்சி விமானங்கள் வாங்க அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- அதை செயல்படுத்தும் வகையில் எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து எச்டிடி-40 ரக 70 பயிற்சி விமானங்களை ரூ.6,828.36 கோடி செலவில் வாங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
- இந்த பயிற்சி விமானங்களை வரும் 6 ஆண்டுகளில் படிப்படியாக வாங்கி விமான படையில் சேர்த்து கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
- ஒன்றிய அரசின் திட்டம் மூலம் எச்.ஏ.எல் தொழிற்சாலைக்கு வர்த்தகம் பெருகுவதுடன் 1,500 பேருக்கு நேரடியாகவும் 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் மண்டலம் 213 ரன் ரன் எடுத்த நிலையில், மேற்கு மண்டலம் 146 ரன்னுக்கு சுருண்டது.
- 67 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் மண்டலம் 230 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு மண்டலம், 84.2 ஓவரில் 222 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
- 75 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டல அணி துலீப் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வித்வத் கவெரப்பா தட்டிச் சென்றார்.
- 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாள் இன்று. ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கி 14 நாட்களாக நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டி, இன்றுடன் முடிவடைந்தது.
- விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.
- ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் செபலோஸ், ஸ்பெயினின் மார்செல் ஜோடியுடன் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி மோதியது. இதில், கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று, விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர்.
- 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டித்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆன்ஸ் ஜபியூரை நேர் செட்களில் தோற்கடித்து மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டத்தை வென்றார். இதன் மூலம், அவர் தரவரிசையில் குறைந்த மற்றும் முதல் தரவரிசை பெறாத போதிலும், சாம்பியன்ஷிப் பட்ட வென்ற முதல் வீராங்கனை ஆனார்.
- செக் குடியரசைச் சேந்த 24 வயதான வோன்ட்ரூசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜபியூரை தோற்கடித்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். வொன்ட்ரூசோவாவின் உலக தரவரிசை 42 ஆகும், மேலும் விம்பிள்டனில் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் தரவரிசையில் இல்லாத முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
- லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 36வயதான ஜோகோவிச்சை, 20 வயதான அல்காரஸ் எதிர்கொண்டார். பிரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச், முதல் செட்டை 6க்கு1 என்ற செட்டில் கைப்பற்றினார்.
- 2வது செட்டை அல்காரஸ் 7க்கு6 என்று கைப்பற்றிய நிலையில், 3வது செட்டை 6க்கு 1 என்று எளிதில் வென்றார்.
- எனினும் ஜோகோவிச் தன்னுடைய அனுபவத்தையும், சக்தியையும் திரட்டி 4வது செட்டில் 6க்கு3 என்ற கணக்கில் தனதாக்கினார். இதனால் சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி செட் வரை ஆட்டம் சென்றது.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி செட்டை 6க்கு4 என்ற கணக்கில் கார்லோஸ் கைப்பற்றினார். 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 1க்கு6, 7க்கு6,6க்கு1,3க்கு6,6க்கு4 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இதன் மூலம் தொடர்ந்து 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற ஆல்காரஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- பாங்காக்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கியது.
- இதில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்றனர்.
- ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற சந்தோஷ் 49.09 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கல் வென்றுள்ளார்.
- 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் ஜோதி யா்ராஜி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.
- இந்திய வீராங்கனை அபா கதுபா பெண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 18.06 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்த அபா கதுபா தேசிய சாதனையை சமன் செய்தார்.
- இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறைவடைந்தது. இந்த தொடரில் 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
- இதன்படி 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.