14th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோவளம் சதுப்பு நிலப்பகுதியில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கும் பணி - ஒன்றிய அமைச்சர் பூபேந்திரா தொடங்கி வைத்தார்
- இந்திய வனத்துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடலோர மறுவாழ்வு பணி திட்டத்தின் கீழ் கடற்கரையை ஒட்டியுள்ள சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இதற்கான தொடக்க விழா கோவளம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு தலைமை தாங்கினார்.
- இதில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனப்படை தலைவர் சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனவிலங்குகள் காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, சென்னை வட்ட தலைமை வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, செங்கல்பட்டு மாவட்ட வனஅலுவலர் ரவிமீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- இதில் ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டு, கோவளம் முகத்துவார பகுதியில் உள்ள கழிமுகத்தில் மாங்குரோவ் மரக்கன்றுகளை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நட்டு இப்பணியை தொடங்கி வைத்தார்.
- பல நாடுகள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டது இல்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் திட்டத்தை தொடங்கியது.
- முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -1 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்து ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது.
- பின்னர் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகளை இறக்கி ஆய்வுகளை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.
- ஆனால் சந்திரயான்-2 லேண்டரான விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது. கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து இம்முறை தவறுகளை திருத்திக் கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரையிறங்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
- இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணிக்கு எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு ராக்கெட்டின் 2 எரிபொருள் நிரம்பிய அலகுகள் எறியூட்டப்பட்டு தீயை வெளியேற்றிய படி ராக்கெட் விண்ணில் பாயத் தொடங்கியது.
- சரியாக 127 வினாடிகளில் 2 எரிபொருள் அலகுகள் பிரிந்தன. அதைத் தொடர்ந்து 194 வினாடியில் ராக்கெட்டின் மேல் பக்க கவசமும், 305வது நொடியில் இரண்டாவது எரிபொருள் அலகும் பிரிந்தது.
- தொடர்ந்து விண்கலனை சுமக்கும் பிரிவு பயணித்து இறுதியாக 17வது நிமிடத்தில் விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அழைப்பை ஏற்று சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
- இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டணியின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ராணுவ இசைக்குழுவின் தலைமையில் இந்திய முப்படைகளைச் சேர்ந்த 241 உறுப்பினர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
- இந்திய ராணுவத்தின் குழுவுக்கு ராஜ்புதானா ரைபிள்ஸ் படைப்பிரிவுடன் இணைந்து பஞ்சாப் படைப்பிரிவும் தலைமை தாங்கியது.
- இந்த அணிவகுப்பின் ஒருபகுதியாக, இந்திய விமானப்படையின் ஹசிமாரா விமானப்படைப்படைத் தளத்தைச் சேர்ந்த 101 ஸ்க்வாட்ரன் படைப்பிரிவிலுள்ள ரஃபேல் ஜெட் விமானங்களும் பங்கேற்றன.
- 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது பாஸ்டில் சிறைச்சாலை தகர்க்கப்பட்டதன் நினைவு தினத்தை ஜூலை 14-ம் தேதி குறிக்கிறது.
- இது இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற ஜனநாயக கோட்பாடுகளை அடையாளப்படுத்துகிறது.