13th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
- பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்படும் நிலையில் அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
- முன்னதாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விருதை வழங்கினார். இதன்மூலம் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
- இந்த கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்பது பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதற்கு முன்பு இந்த விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொழிலாளர் நலத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
- அரசு ஐடிஐ.க்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறவேண்டும். இந்த நோக்கத்தில் தமிழக அரசு 71 அரசு ஐடிஐ.க்களை ரூ.2,877.43 கோடியில் 'தொழில் 4.0' தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.
- அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 'தொழில் 4.0' தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்க தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
- அதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டமாக 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடி செலவில் 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இம்மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதன்மூலம் அரசு ஐடிஐ.க்களில் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.
- ராணுவ அமைச்சகம் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடையே, நம் ராணுவ வீரர்களிடம் சிறுதானிய உணவுமுறைகளை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தம் ராணுவ வீரர்களிடையே சிறுதானியம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.ராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள மெஸ், கேன்டீன்கள், பிற உணவு விற்பனை நிலையங்களில் சிறுதானியங்களில் செய்யப்பட்ட மெனுக்களை அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும்.
- ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களையும், 3 ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கிகளையும் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
- இந்திய கடற்படையின் தேவையை கருதி, 26 கடல்சார் ரபேல் போர் விமானங்களையும், மூன்று ஸ்கார்பியன் கிளாஸ் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளையும் பிரான்சிடம் இருந்து பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே இது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, இவற்றில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள், விமான உபகரணங்கள் மற்றும் விமானிகள் பயிற்சி மற்றும் தளவாட உதவி ஆகியவையும் பிரான்சிடமிருந்து கிடைக்கும். கூடுதலாக, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செயல்பாடுகள், உள்நாட்டு ஆயுதங்களை இந்த விமானங்களில் இணைப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். பிரான்ஸ் அரசுடன் நடத்தும் பேச்சு அடிப்படையில் விமானங்களுக்கான விலை இறுதி செய்யப்படும்.இந்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களையும், பிரான்சுடன் இணைந்து மேஸகான் கப்பல் கட்டுமான நிறுவனம் மும்பையில் கட்டமைக்கும். இதில், உள்நாட்டு உபகரணங்கள் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
- மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3- வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி-20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். ஏற்கனவே கும்ளே, ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
- கும்ளே - 953 விக்கெட், (449)
- ஹர்பஜன் சிங்- 707 விக்கெட் (442)
- அஸ்வின் - 702* விக்கெட் (351)
- மேலும் 33 முறை அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தந்தை. மகன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். தற்போது நடைபெற்றும் வரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான, சிவ்நரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அதேபோல் கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில், தந்தையான சிவ்நரைன் சந்தர்பாலை, அஸ்வின் அவுட்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார்.
- இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாய் ஆகிய இருநாட்டு கரன்ஸிகளின் பரிமாற்றத்தின் அடிப்படையில் இனி வர்த்தகம் நடைபெறும்,
- இந்த பரிவர்த்தனை நடவடிக்கையால் இந்தியாவுடனான வர்த்தக செலவினம் கணிசமாக குறையும் என்றும், இந்த புதிய பரிவர்த்தனை முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் முழு அளவில் நடைபெறும்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் 2 ஆம் நாளன்று மட்டும் இந்திய அணிக்கு 3 தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
- மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13 புள்ளி 9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கம் கிட்டியுள்ளது.
- இதே போன்று ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
- ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
- மொத்தம் 6 பதக்கங்களுடன் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் முதல் இடத்திலும் உள்ளது.
- ஒருங்கிணைந்த கடற்படைகளால் நடத்தப்படும் பயிற்சியான ஆபரேஷன் தெற்குலகின் தயார்நிலை 2023-ல் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் சுனைனா கப்பல் 2023 ஜூலை 10-12 -ம் தேதி வரை செஷல்ஸ் நாட்டிற்குச் சென்றது.
- இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- பன்னாட்டு முயற்சியான CMF பயிற்சியின் மூலம் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்றனர்.
- கப்பலை செலுத்துதல், விபிஎஸ்எஸ் (அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி), விபத்துகளின்போது மக்களை வெளியேற்றுவதற்கான பயிற்சிகள் போன்றவை இப்பயிற்சியின்போது விளக்கப்பட்டன.
- பின்னர் கப்பலின் பணியாளர்கள், செஷல்ஸ் பாதுகாப்புப் படைகள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு யோகா அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
- என்எஃப்டி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.
- இந்த மாநாட்டில் உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஜி20 நாடுகள், 9 சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட இந்த 2 நாள் மாநாட்டின் 900-க்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.