Type Here to Get Search Results !

HRCE கைபேசி செயலி / HRCE MOBILE APP

  • HRCE கைபேசி செயலி / HRCE MOBILE APP: இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "HRCE"எனும் கைபேசி செயலியினை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  • இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை புவி நிலை குறியீட்டு தகவல்களுடன் பதிவேற்றம் செய்யும் வகையிலான "HRCE" எனும் கைபேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • இதன்மூலம் திருக்கோயில்கள் ஆய்வு, திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள், உழவாரப் பணிகள், திருப்பணிகள் ஆய்வு போன்ற நடவடிக்கைகளை புகைப்படங்களாகவும், குரல் வழி செய்திகளாகவும் பதிவு செய்யவும், ஆவணங்களை பதிவேற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்படும் தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் கண்காணிக்க முடியும். 
  • இச்செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்களின் அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிகளை செம்மைப்படுத்தி, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும்.

ENGLISH

  • HRCE MOBILE APP: Hindu Religious Endowments Minister Shekhar Babu on Saturday launched a newly developed mobile app called "HRCE" to upload visit and inspection details of Hindu Religious Endowments Department officials, temple priests and temple workers in one-time puja program.
  • A mobile app called "HRCE" has been launched to upload visit and inspection details of Hindu Religious Endowment Department officers, one-time puja priests and temple staff with geo-coded information. 
  • Through this, it has been made possible to record the activities such as inspection of temples, festival precautions, coordination meeting of departmental officers, court proceedings, plowing works, repair work inspection as photographs, voice messages and upload documents.
  • It can also monitor the work being carried out with an annual allocation of Rs.2 lakh each for the renovation of 1250 rural temples and 1250 Adi Dravidian temples. Based on the details recorded in this process, the work of officers and employees can be refined and follow-up actions can be taken.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel