9th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க அமேசான் கிசானுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும்.
- அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் மூலமாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு உயர்தரமான புதிய உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு அமேசான் பயிற்சி அளிப்பதோடு அவர்களின் உற்பத்திப் பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும்; நுகர்வோர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தும்.
- பிரதமரின் விரைவு சக்தி தேசிய திட்டத்தின் 49வது இணைப்பு திட்டமிடல் குழு கூட்டம் திரிபுராவில் சாலைவழித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது.
- புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தளவாடப் பிரிவு சிறப்புச் செயலர் திருமதி சுமிதா தவ்ரா தலைமை தாங்கினார்.
- கோவாய்-தெலியமுரா-ஹரினாவில் 134.9 கிமீ நீளம் கொண்ட சாலைப் பகுதியை மேம்படுத்தவும், திரிபுராவில் NH-208 இன் நடைபாதையை விரிவுபடுத்தவும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2,486 கோடி ஆகும்.
- இந்த சாலை கோவாய், கோமதி மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டங்கள் வழியாக கோவாய், தெலியமுரா, ட்விடு, அமர்பூர், கர்புக் மற்றும் திரிபுராவின் ஹரினா போன்ற இடங்களை இணைக்கிறது.
- இது அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், திரிபுராவில் பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும்.
- இந்தியாவில் உற்பத்தி என்ற உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக ஐடெக்ஸ் நிறுவனம் மூலம் 2-வது கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் 2023 ஜூன் 9 அன்று கையெழுத்திட்டது.
- பெங்களூரில் உள்ள ஆஸ்ட்ரோம் டெக் என்ற தனியார் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ என்பது உயர்ந்த அலைவரிசையுடன் நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்பியில்லா வானொலியாகும். இதன் மூலம் நம்பகமான, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யமுடியும்.
- இதில் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே கருவியை எந்தவித தடங்கலும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐடெக்ஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எம்எஸ்எம்இ உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தனிநபர் கண்டுபிடிப்பாளர்கள் ஈடுபாட்டுடன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பது இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.