Type Here to Get Search Results !

இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ICMR ஆய்வு / ICMR REPORT ON DIABETES IN INDIA 2023

  • இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ICMR ஆய்வு / ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: உலகம் முழுவதும் நீரிழிவு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. 
  • அதோடு, இது தொடர்பான ஆய்வு கட்டுரைகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சிகரமான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டுள்ள ஆய்வு கட்டுரை பிரிட்டன் மருத்து ஆய்வு இதழான ’Lancet’ என்பதில் வெளியாகி உள்ளது. 
  • இதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, தொடர்ந்து அதிகரித்து வரும் நீரிழிவு பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு பாதிப்பு

  • இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ICMR ஆய்வு / ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: இந்தியாவில் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-ல் 7 கோடியாக இருந்த எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் 44% அதிகரித்துள்ளது. 
  • இந்தியாவில் சராசரியாக 15.3 சதவீதம் பேர் 13.6 கோடி பேருக்கு ‘prediabetes’ இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிகளவிலான பாதிப்பு

  • இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ICMR ஆய்வு / ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: இந்தியாவில் கோவா, புதுச்சேரி,கேரளா, சண்டிகர், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சிக்கிம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக நீரிழிவு பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களாகும்.
  • கோவா - 26.4%, புதுச்சேரி 26.3%, கேரளா - 25.5%, என மூன்றும் அதிகளவில் நீரிழிவு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட நீரிழிவுக்கு முந்தைய நிலையின் எண்ணிக்கை குறைந்த அளவு உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே உத்தரபிரதேசம் மாநிலத்தில் 4.8% நீரிழிவு பாதிப்பு பதிவாகியுள்ளது இதுவே குறைவானது. ஆனால், தேசிய சராசரியான 15.3%-த்துடன் ஒப்பிடுகையில் இம்மாநிலத்தில் 18% நீரிழிவு முந்தைய நிலையின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் மட்டும் நீரிழிவு பாதிப்புகள் உள்ளவர்களை விட ஒவ்வொரு நான்கு பேர் நீரிழிவு முந்தைய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், நீரிழிவு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இது டைப்-2 நீரிழிவு என்று சொல்ல கூடிய அளவிற்கு அதிகளிவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் குழந்தைகள், வளரிளம் பருவத்தில் உள்ளவர்கள் ஆகியோர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும், இவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்விற்காக கடந்த 2008 அக்டோபர் 18 முதல் 2020 டிசம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் கிராம மற்றும் நகர் புற பகுதிகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். 
  • இந்த ஆய்வில் நீரிழிவு பாதிப்புகள் மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: The medical world is warning that the number of people suffering from diabetes is increasing day by day all over the world. Apart from this, research articles related to this are published from time to time and provide shocking information. In this case, the research paper conducted by the Indian Council of Medical Research has been published in the British medical journal 'Lancet'.
  • According to the information provided in this, it has been pointed out that it is necessary for the government to take necessary measures to control the ever-increasing incidence of diabetes.

10 crore people are affected by diabetes in India

  • ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: The number of diabetics in India has increased to 10 crores. 7 crore in 2019, an increase of 44% in four years. According to the study, an average of 15.3 percent of India's 13.6 crore people have prediabetes. The study also noted that 36% had high blood pressure.

High impact

  • ICMR REPORT ON DIABETES IN INDIA 2023: Goa, Puducherry, Kerala, Chandigarh, Delhi, Tamil Nadu, West Bengal, Sikkim, Punjab, Haryana are the 10 states with the highest incidence of diabetes in India.
  • Goa - 26.4%, Puducherry 26.3%, Kerala - 25.5%, all three reported the highest prevalence of diabetes. The study indicated that Tamil Nadu and Chandigarh had a lower prevalence of pre-diabetes than diabetes.
  • Uttar Pradesh has the lowest diabetes prevalence in the country at 4.8%. But the state has a high prevalence of pre-diabetes at 18% compared to the national average of 15.3%. In Uttar Pradesh alone, more than one in four people have pre-diabetes.
  • Also, people with pre-diabetes tend to have high blood pressure. However, it is reported that it is not increasing to the extent that it can be called type-2 diabetes. Studies have found that children and adolescents are at pre-diabetes and are at a higher risk of developing diabetes due to dietary and lifestyle changes.
  • For this study, more than 1 lakh people in rural and suburban areas participated in the study from October 18, 2008 to December 17, 2020. In addition to diabetes, the study also reported an increase in high blood pressure, cholesterol and obesity.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel