5th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க. அறிவொளி நியமனம்
- 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டது. இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
- இந்த முடிவை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இது நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
- இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு, அதன் இயக்குநராக முனைவர் அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக முனைவர் ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதேபோல் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராக குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் தொழில் சூழல் முறையை உருவாக்குவதுத் தொடர்பாக கருத்தரங்கை இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அதன் 32-வது நிறுவன தினத்தில் நடத்தியது. இதில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு அல்கேஷ் குமார் சர்மா கலந்து கொண்டார்
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்பதன் சுருக்கமாக லைஃப் என்ற கோட்பாட்டை கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி 26 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
- தண்ணீர் சேமிப்பு, எரிசக்தி சேமிப்பு, மின்னணுக் கழிவுகளை குறைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைத்தல், கழிவுப்பொருட்களைக் குறைத்தல், நீடிக்கவல்ல உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை பின்பற்றுதல் என்ற ஏழு மையப்பொருட்கள் லைஃப் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டன. இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல்தின மையப்பொருள் பிளாஸ்டிக் கழிவுக்கு தீர்வுகள் என்பதாக உள்ளது.
- சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
- புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காரியமில வாயு வெளியேற்றத்தை 2070-க்குள் பூஜ்ஜிய நிலைக்கு குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தின் டாடா அகரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ் நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் கடந்த வாரம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மின் வாகன பேட்டரி தொழிற்சாலை நிறுவப்படும். இதில் லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கப்படும்.
- இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் லித்தியம் பேட்டரி உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கும்.
- கடந்த 2021-ல் இந்தியாவின் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.3,169 கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல்ரூ.12.58 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.7,680 கோடி மதிப்பிலான 45 கோடி லித்தியம் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்தது.
- கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு மற்றும் 5ஜி நெட்வொர்க் ஆகியவற்றை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது சர்வதேச மற்றும் பிராந்திய புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
- இந்த சவால்களை சமாளிக்க லித்தியம் பேட்டரிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த சூழலில் காஷ்மீரில் நிலத்துக்கடியில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- பூமிக்கடியில் இருக்கும் அனைத்து நில உரிமையாளருக்கு உரிமை உண்டு. அதேநேரம் உணர்வுபூர்வமான தாதுப் பொருட்களை தனியார் எடுத்துக்கொள்ள மத்திய அரசு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.