4th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜி 20 இந்தியா தலைமை: 3வது சுகாதார பணிக்குழு கூட்டம் (HWG)
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் 3வது ஜி20 சுகாதார பணிக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பாகேல் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
- ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். 03.05.2023 அன்றும், அதன்பின்னரும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.
- மணிப்பூரில் நடந்த வன்முறை, அது பரவியதற்கான காரணங்கள் குறித்தும், பொறுப்பான அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆணையம் விசாரிக்கும்.
- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், இந்த விசாரணை ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
- ஆணையத்தின் முதல் அமர்வு நடைபெறும் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், அது தனது அறிக்கையை கூடிய விரைவில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும். ஆணையத்தின் தலைமையகம் இம்பாலில் செயல்படும்.