2nd JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி - பாகிஸ்தான் வீழ்த்தி 4-வது முறையாக மகுடம் சூடிய இந்திய அணி
- 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
- விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியில் இந்தியா 2 கோல்களையும், பாகிஸ்தான் ஒரு கோலையும் அடித்தன. போட்டி தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், 20ஆவது நிமிடத்தில் அரைஜீத் சிங் ஹுன்டாலும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு வலு சேர்த்தனர்.
- இந்த முறை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா பெற்ற ஜூனியர் ஹாக்கி கோப்பைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஜூனியர் ஆசியக் கோப்பையை இந்தியா வென்றிருந்தது.
- இதையடுத்து ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிவீரர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
- மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023-ஐ இன்று வெளியிட்டார்.
- பல்கலைக்கழக மானியக்குழுத்தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
- தேசியக் கல்விக்கொள்கை 2020 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விதிகளை மறுஆய்வு செய்யவும், திருத்தம் செய்யவும், பல்கலைக்கழக மானியக்குழு நிபுணர் குழுவை அமைத்தது.
- இறுதி வரைவு விதிகளை மத்திய உயர்கல்வித்துறைக்கு அனுப்புவதற்குமுன் நிபுணர் குழுவினரின் வழிக்காட்டுதல், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன.
- முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இந்த விதிகள் தேசியக்கல்விக்கொள்கை 2020வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு என்ஏஏசி “ஏ” தரத்துடன் 3.01 சிஜிபிஏ பெற்றிருக்கவேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.
- கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரர்களின் உரிய ஆவணங்களையும், வசதிகளையும் நிபுணர் குழு இணையவழியில் ஆய்வு செய்யும். இந்த புதிய விதிகள், தரத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
- என்ஏஏசி “ஏ” தரத்தைவிட, குறைந்த மதிப்பை பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இடம்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி நிபுணர் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். குறைகளை நிவர்த்தி செய்யாதபட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற யுஜிசி பரிந்துரைக்கும்.
- கட்டணம், அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்