Type Here to Get Search Results !

29th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உலக வங்கி ஒப்புதல்
  • அண்டை நாடான இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.
  • கடும் நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா கடன் உதவி அளித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக சுமார் ரூ.5742 கோடி நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதில் ரூ.4100 கோடி பட்ஜெட் உதவிக்காகவும் ரூ.1642 கோடி சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையின் டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்
  • தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு நாளையுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1990-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு. ஜிவால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காவல் பிரிவுகளில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
  • அவர் வகித்து வந்த சென்னை காவல் ஆணையர் பொறுப்பு காலியானதை அடுத்து அந்த பதவிக்கு 109 வது ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
  • தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக 2021ம் ஆண்டு, மே மாதம் முதல் பதவியில் இருந்து வந்த வெ.இறையன்பு, 60 வயது நிறைவடைந்து விட்டதைத் தொடர்ந்து, நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
  • நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்தியா- தான்ஸானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 2-வது கூட்டம் அருஷாவில் நடைபெற்றது
  • இந்தியா- தான்ஸானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 2-வது கூட்டம், அருஷாவில்  2023 ஜூன் 28  மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்றது. 
  • இக்கூட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத்துறை இணைச்செயலாளர்  திரு. அமிதாப் பிரசாத்  தலைமையிலான இந்தியக் குழு கலந்துகொண்டது. 
  • இந்தியக் குழுவில்,   பாதுகாப்பு அமைச்சகம்  மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.  
  • தான்ஸானியாவிற்கான  இந்தியத் தூதர் திரு. பினை எஸ். பிரதானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில், பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து  இதில்  ஆலோசிக்கப்பட்டது.  
  • இந்தியப் பாதுகாப்புத் துறையின் ராணுவ உபகரண உற்பத்தி முதல்  ஏற்றுமதி வரையிலான பல்வேறு அம்சக்ஙள் குறித்து இந்தியக் குழுவினர் எடுத்துரைத்தனர். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான 5 ஆண்டு கால செயல்திட்டத்திற்கு இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த செயல்திட்டத்தில், இருதரப்பு ராணுவப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
  • இந்தக் கூட்டத்தின் ஒருபகுதியாக,  இந்தியப்  பாதுகாப்பு பொதுத்துறை நிறுவன பிரதிநிதிகள், தான்ஸானியா தரப்பினருடன்   சிறப்பு ஆலோசனை மேற்கொண்டனர்.
  • இந்தக்   கூட்டுப்  பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக்  கூட்டத்தில்  இந்தியக் குழு பங்கேற்றது,  இந்தியா-தான்ஸானியா இடையேயான பாதுகாப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel