Type Here to Get Search Results !

தமிழ் மண்வளம் இணைய முகப்பு / TAMIL MANNVALAM WEBSITE

  • தமிழ் மண்வளம் இணைய முகப்பு / TAMIL MANNVALAM WEBSITE: தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2022-23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 'தமிழ் மண்வளம்' என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
  • வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட 'தமிழ் மண்வளம்' எனும் இணைய முகப்பு தமிழ்நாடு முதலமைச்சரால் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. 
  • 'தமிழ் மண்வளம்' இணைய முகப்பின் பயன்கள் விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில் தமிழ்மண் வளம் இணையதளத்தை அணுகலாம். 
  • இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், இதில் மண்டல வாரியாகவும் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன.
  • வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். "தமிழ் மண்வளம்" என்ற இணைய முகப்பு இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டிலேயே முன்னோடியாக விளங்குகிறது. 
  • இந்த இணைய முகப்பின் பயனாக, விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதன் மூலம் சாகுபடி செலவு குறைவதுடன், மண் வளம் காக்கப்பட்டு, பயிர் மகசூல் அதிகரிக்கும்.

ENGLISH

  • TAMIL MANNVALAM WEBSITE: In the Tamil Nadu Legislative Assembly, it was announced by the Minister of Agriculture - Farmers' Welfare that a website called 'Tamil Manvalam' will be created in the Agriculture Financial Statement for the year 2022-23.
  • The website 'Tamil Manvalam' developed by the Department of Agriculture - Farmers' Welfare was launched by the Chief Minister of Tamil Nadu yesterday for the use of farmers. Benefits of 'Tamil Manvalam' Website Farmers can access the Tamil Manvalam website at http://tnagriculture.in/mannvalam/ through computer or mobile phone. 
  • On this website, if farmers register their district, locality, village, field number, subdivision number of their land, immediately, all the information about soil fertility will be downloaded and available in electronic form as soil fertility card on their mobile phone. This website is designed in Tamil and English languages. Also, the soil types are given zone-wise and district-wise and village-wise.
  • Farmers can also get recommendations on agriculture, horticulture, agroforestry, what kind of crops can be cultivated and how much fertilizer should be applied to the selected crop. 
  • A first-of-its-kind web portal in India called "Tamil Manvalam" is a pioneer in the country. With the help of this website, farmers can know the soil fertility of their land and apply fertilizers accordingly to reduce cultivation cost, conserve soil fertility and increase crop yield.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel