28th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உட்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
- இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்நிலையில் ஏப்.6-ம் தேதி முதல் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 21 பணியாளர்களைக் கொண்டு 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கற்கலால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்நிலையில், சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "தமிழ் மண்வளம்" எனும் புதிய இணைய முகப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2022-23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 'தமிழ் மண்வளம்' என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
- 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, மத்திய அரசுக்கும் பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் (சிடிஆர்ஐ) இடையே கையெழுத்தான தலைமையக உடன்படிக்கைக்கு (ஹெச்கியூஏ) அங்கீகாரம் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 2019 செப்டம்பர் 23-ம் தேதி, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, சிடிஆர்ஐ-யை தொடங்கிவைத்தார்.
- மத்திய அரசு தொடங்கிய மிகப்பெரிய உலக அளவிலான முன்முயற்சியான இது, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு விஷயங்களில் உலகத் தலைமைக்கான இந்தியாவின் முயற்சிகளாக இது பார்க்கப்பட்டது.
- சிடிஆர்ஐ-யையும் நிறுவுவதற்கு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-20 முதல் 2023-24 வரை 5 ஆண்டு காலத்துக்கு சிடிஆர்ஐ-க்கு ரூ.480 கோடி நிதி ஆதரவுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
- இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை, சிடிஆர்ஐ-யை சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியது. தலைமையக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய அரசுக்கும், சிடிஆர்ஐ-க்கும் இடையே தலைமையக உடன்படிக்கை கையெழுத்தானது.
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா
- 2023-ஐ அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் விளைவாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மென்மேலும் வளர்ச்சியடைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஊக்குவித்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளை ஊக்கப்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.
- இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்படும். 2023 – 2028 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் தேசிய கல்விக் கொள்கையின் ஆலோசனைகளின்படி நாட்டில் உயர்மட்ட அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பதற்கான உச்சபட்ச அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமையும்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை விளங்கும். இந்த அமைப்பை பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் மூலம் நிர்வாகம் செய்யப்படும்.
- தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அனைத்து அமைச்சகங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பிரதமர் அதிகாரப்பூர்வ தலைவராகவும், அறிவியல், தொழில்துறை அமைச்சர், மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அதிகாரப்பூர்வ துணைத் தலைவர்களாகவும் செயல்படுவர்.
- தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை பணிகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான குழு நிர்வாகம் செய்யும்.
- தொழில் துறை, கல்வி மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தொழிற்சாலைகளின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாக விளங்கும்.
- இதற்கு மாநில அரசுகளின் அறிவியல் மற்றும் துறை சார்ந்த அமைச்சகங்கள் துணைபுரியும். இதன் விளைவாக கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவும் ஒழுங்கு முறை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக அமைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிகளவில் நிதியுதவி ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும்.
- இந்த மசோதா மூலம் 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி ஆணையத்தின் பணிகளை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொள்ளும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழி திறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.07 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதைக் கருத்தில்கொண்டு, 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு முடிவெடுத்துள்ளது.
- அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.291.97 வழங்கப்படும். நடப்பு 2022-23 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ. 282.12 வழங்கப்படுகிறது.
- இந்தப் பருவத்திற்கான கரும்பு உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ. 157-ஆக உள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை உற்பத்திச் செலவை விட 100.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு பருவத்தைவிட 2023-24 பருவத்திற்கான விலை 3.28 சதவீதம் அதிகமாகும்.
- 2023-24 பருவத்தில், 2023 அக்டோபர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு இந்த விலைப் பொருந்தும். இந்த சர்க்கரைத்துறை மிக முக்கியமான விவசாயம் சார்ந்த துறையாக உள்ளது.
- இது 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. மேலும் சர்க்கரை ஆலைகளில், பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களும், கரும்பு அறுவடை மற்றும் போக்குவரத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கும் இதனால் பயன்கிட்டும்.
- மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க பிரத்யேக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ரூ.3,70,128 கோடி செலவிலான புத்தாக்கத் திட்டங்களைக் கொண்ட பிரத்யேக தொகுப்பிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (சிசிஇஏ) இன்று (28.06.2023) ஒப்புதல் அளித்துள்ளது.
- நிலையான வேளாண்மையை முன் நிறுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாடுட்டிற்கும், ஒட்டுமொத்த நலனுக்கும் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கும்.
- இந்த முன்னெடுப்புகள் விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிப்பதுடன், இயற்கை வேளாண்மையை வலுப்படுத்தி, மண் வளத்தைப் புத்துயிர் பெறச்செய்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்.
- இதேபோல் யூரியா மானியத்திட்டத்தைத் தொடர சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ரூ.242க்கு விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையின் சந்தை விலை ரூ.2,200 ஆகும்.
- உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க யூரியா மானியத் திட்டத்தை தொடர்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25) யூரியா மானியத்திட்டத்திற்கு ரூ.3,68,676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 2025-26-ஆம் நிதியாண்டில் 195 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 8 நானோ யூரியா ஆலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இதே போல் மண் வளத்தை மேம்படுத்தி புத்துயிரூட்ட புத்தாக்க நடைமுறைகளைக் கொண்ட தொகுப்பிற்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி விவசாயக் கழிவுகளிலிருந்து வருமானத்தை ஈட்ட வகை செய்யும் சந்தை வளர்ச்சி உதவித் திட்டத்திற்கு ரூ.1,451 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயோ-கேஸ் ஆலைகள் மற்றும் உயர் அழுத்த பயோ-கேஸ் ஆலைகளை கோபர்தன் திட்டத்தின் கீழ் அமைத்து இயற்கை உரங்களையும், பாஸ்பேட் ஊட்டச்சத்துமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே முதல் முறையாக கந்தகப் பூச்சுக் கொண்ட யூரியாவை அறிமுகம் செய்யும் முயற்சிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணின் கந்தகக் குறைப்பாட்டை நீக்குவதுடன் மண் வளத்தைப் பாதுகாத்து விவசாயிகளின் செலவும் குறைக்கப்படும்.
- இந்த யூரியா தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பம் பூச்சு யூரியாவைவிடக் குறைந்த செலவிலானது. இதன் மூலம் விவசாயிகளின் உரத்திற்கான செலவு குறைவதுடன், உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வருமானத்தையும் மேம்படுத்த முடியும்.
- நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரதமரின் கிசான் சம்ருதி மையங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் இந்த மையங்களில் கிடைக்கும்.