Type Here to Get Search Results !

27th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அரசு விழாவாக நடைபெற்றது. 
  • விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். 
  • இத்திட்டத்தின்கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
  • செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262 ஏக்கர் பரப்பளவில் ரூ.153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார். 
  • குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின்கீழ், முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தார்.
  • குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கிலான மெய்நிகர் கண்காட்சியகத்தையும் தொடங்கி வைத்தார். 
  • பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்துக்கான பரிசுத் தொகையை வழங்கினார்.
  • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கி ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான ஃபேம் டிஎன் (FaMe TN) அமைப்புக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
  • மேலும், ஃபேம் டிஎன் (FaMe TN) - சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) இடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விழாவில் ரூ.1,723 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. இதன்மூலம் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
  • இதுதவிர, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனங்களுக்கு விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிறுவனங்களுக்கு சிறப்பாக நிதிவசதி வழங்கிய வங்கிகளில் முதலிடத்துக்கான விருதை இந்தியன் வங்கிக்கும், 2-ம் இடத்துக்கான விருதை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், 3-ம் இடத்துக்கான விருதை பாங்க் ஆஃப் பரோடாவுக்கும் முதல்வர் வழங்கினார்.
மத்திய பிரதேசத்தில் 5 புதிய  வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
  • இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
  • பிரதமர், ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது.
  • மக்களின் பயன்பாட்டிற்காக அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 
முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் துறையுடன் மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
  • முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் ஐபிஎம் என்ற தனியார் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் உள்ள மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிகத்திறன் வாய்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு தனியார் நிறுவனத்தில் தேவையான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • இதையடுத்து ஐபிஎம் நிறுவனம் முன்னாள் படைவீரர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கும்.
  • ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு துறைகளில் 24,234 முன்னாள் படைவீரர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாதுகாப்புப் படையில் இளைஞர்கள் இருக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமார் 60,000 வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர் அல்லது விடுவிக்கப்படுகின்றனர்.
மின் உற்பத்தி நிலையங்கள் பயோமாஸ் துகள்களை குறைந்தவிலையில் வாங்குவதற்கான உயிரி எரிபொருள்கூட்டுக் கொள்கையை மத்திய மின்சக்தி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது
  • அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பயோமாஸ் துகள்களின் விலையை நிர்ணயம் செய்ய மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயிரி எரிபொருள் துகள்களுக்கான வளர்ந்து வரும் சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு, அனல் மின் நிலையங்கள், துகள்கள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • வணிக நம்பகத்தன்மை, மின் கட்டணத்தில் தாக்கம் மற்றும் மின் பயன்பாடுகள், திறமையான மற்றும் விரைவான துகள்கள் கொள்முதல் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட விலை கணக்கில் எடுத்துக்கொள்ளும். மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் உள்ள குழுவால் இறுதி செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட விலை நடைமுறை 2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும்.
  • இக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை, மின் நிறுவனங்கள் தங்கள் அனல் மின் நிலையங்களுக்கு உயிரி எரிபொருள் துகள்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால டெண்டர்களுக்குச் செல்ல வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel