25th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆர்டர் ஆப் தி நைல் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் எகிப்து அதிபர்
- பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
- அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
- அதை தொடர்ந்து எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின் போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
- மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
- இந்நிலையில், எகிப்து அதிபர் அப்துல் பத அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், எகிப்து அதிபர் அப்துல் பதா அல் சிசி பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் தி நைல் விருதை வழங்கி கவுரவித்தார்.
- அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி எகிப்து சென்றுள்ளார். அங்கு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹாசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது மேதத் ஹசன் அலாம், பெட்ரோலியம் மூலோபாய நிபுணருமான தரீக் ஹெஜ்ஜி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அதன் தொடர்ச்சியாக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- அத்துடன், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி முன்னிலையில், இந்தியா - எகிப்து இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இருதரப்பு உறவை "மூலோபாய கூட்டாண்மைக்கு" உயர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், தொல்லியல், சட்டம் மற்றும் தொல்பொருட்கள் ஆகிய துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
- மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி லிமிடெட், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் மெட்ரோ ரயில் பாதைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) நிறுவனத்திற்கு ரூ. 3,045 கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. ஜூன் 24, 2023 அன்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்இசி-யின் வாரியக் கூட்டத்தில் உதவி வழங்குவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது,
- பெங்களூரு மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் கிழக்கு-மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு-தெற்கு வழித்தடம் ஆகிய முதல் கட்டத்தின் விரிவாக்கம் மற்றும் தற்போதைய வழிகள் அடங்கும்.
- இந்த திட்டம் பெங்களூருவில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்தை எளிதாக்கும். இரண்டாம் கட்டத் திட்டம் நிறைவடைந்தவுடன், பெங்களூரு மெட்ரோ திட்டம் 101 நிலையங்களுடன் 114.39 கிலோ மீட்டர் மொத்த நீளத்தைக் கொண்டதாக இருக்கும்.
- ஆர்இசி லிமிடெட் என்பது இந்தியா முழுவதும் மின் துறைக்கான கடன் அளித்தல் மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு வங்கி சாரா கடன் (என்.பி.எஃப்.சி) நிறுவனமாகும்.
- பிஎம்ஆர்சிஎல்-க்கான இந்த நிதி உதவி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியளிப்பதில் ஆர்இசி-யின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.