24th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா - அமெரிக்கா இடையே உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
- வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் திரு ஜோசப் ஆர். பைடனும் பங்கேற்றனர்.
- இந்நிகழ்வை அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமதி ஜினா ரைமண்டோ ஒருங்கிணைத்தார். இதில் இந்திய, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் முன்னணித் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு', 'மனிதகுலத்திற்கான உற்பத்தி' என்பதில் கவனம் செலுத்துவது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆய்வுசெய்ய இரு தலைவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
- தங்களின் குடிமக்கள் மற்றும் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை செயல்படுத்துவதில் இந்தியா-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பங்கு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின.
- இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பில் இந்தியா மேற்கொண்ட முன்னேற்றங்கள் என்பதுடன் உலகளாவிய ஒத்துழைப்புகளைக் கட்டமைக்க, இரண்டு தொழில்நுட்ப சூழல் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
- உத்திகள் வகுத்தலில் ஒருங்கிணைப்பு, தரநிலைகளில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றைத் தொடங்க அந்தந்தத் தொழில்களுக்கு இடையே வழக்கமான ஈடுபாட்டிற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
- சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதற்குரிய மகத்தான திறனைப் பிரதமர் தமது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார். புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
- உயிரித்தொழில்நுட்பம், குவாண்டம் உள்ளிட்ட புதிய துறைகளுக்கு இந்திய-அமெரிக்கத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்த உதவுமாறு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார்.
- இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு நமது மக்களுக்கும் உலகிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய அரசின் மினி ரத்னா (வகை - I) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் புதுதில்லி கிழக்கு கித்வாய் நகர் அலுவலக வளாகத்தில் ஒரு அதிநவீன வணிக மையத்தை அமைத்துள்ளது.
- புதிய அலுவலகம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளை உள்ளடக்கி, காகிதப் பயன்பாட்டை நீக்கி, நிறுவனம் முழுவதும் திறமையான டிஜிட்டல் பணிப்பாய்வுகளை மேம்படுத்துகிறது ஐஆர்இடிஏ-வின் நிலையான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், முற்றிலும் காகிதமற்ற முறையில் செயல்பட வடிவமைக்கப்பட்ட அலுவலகத்தை, ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் தாஸ் திறந்து வைத்தார்.
- காகிதமில்லாத அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம், ஐஆர்இடிஏ அதன் கார்பன் தடத்தைக் குறைப்பது, கழிவு உற்பத்தியைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கித்வாய் நகரில் உள்ள புதிய அலுவலகம், உற்பத்தித்திறன், ஒத்துழைப்பு மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது யோகா, தியானம் மற்றும் உடற்தகுதி நடவடிக்கைகளுக்கான பிரத்யேக இடங்கள் போன்ற மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது, இது ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது.
- இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி மேம்பாட்டு அமைப்பான தேசிய புனல் மின்சக்தி கழகம் என்எச்பிசி , ஒடிசா அரசாங்கத்தின் கிரிட்கோ ஒடிஷாவுடன், ஒடிசா மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறைந்தபட்சம் 2,000 மெகாவாட் திறன் கொண்ட பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களையும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களையும் (தரையில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி திட்டங்கள் / மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டங்கள்) அமைக்க திட்டமிடுகிறது.
- புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன்23 அன்று, என்எச்பிசி நிர்வாக இயக்குனர் திரு ரஜத் குப்தா மற்றும் கிரிட்கோ நிர்வாக இயக்குனர் திரு திரிலோச்சன் பாண்டா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.