Type Here to Get Search Results !

22nd JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd JUNE 2023 ENGLISH TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கலைஞர் பேனா நினைவுச்சின்னம் திட்டத்திற்கு மத்திய  அரசு அனுமதி
  • சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு' 15 நிபந்தனைகளுடன் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு (CRZ) அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த இறுதி ஒப்புதலுடன், மாநில அரசு முன்மொழிவை செயல்படுத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம் என தெரிகிறது. 
  • கடந்த ஜூன் 19ஆம் தேதி பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் CRZ அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெருமையை போற்றும் வகையில் 30 மீட்டர் உயரத்திலும், 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பளவிலும் இந்த பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்ட முன்முடிவை தமிழ்நாடு அரசு முன்மொழிந்தது. 
  • இதில் பேனா பீடம், கடற்கரைக்கு மேலே உள்ள லேட்டிஸ் பாலம் மற்றும் கடலுக்கு மேலே நிலம் மற்றும் பாதசாரிகளுக்கான பாதை ஆகியவை அடங்கும். 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம் நிலத்தில் 290 மீட்டர் நீளமும், கடலுக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். 
நாசா - இஸ்ரோ இணைந்து செயல்பட ஒப்பந்தம்
  • வாஷிங்டன் சென்ற பிரதமர்மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்தில் பங்கேற்றார். இதையடுத்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா', இந்திய விண்வெளி அமைப்பான 'இஸ்ரோ' இணைந்து செயல்படுவது மற்றும் மற்றும் ஹெச்ஒன் பிவிசா விதிமுறைகள் தளர்வு தொடர்பான என ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் நாசா- இஸ்ரோ இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வது மற்றும் 2025ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
செவிலியர்களுக்கான 2022 மற்றும் 2023-ம் ஆண்டின் தேசியஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
  • புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்கினார்.
  • செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உன்னத மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் கைவிளக்கேந்திய காரிகை என்றழைக்கப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் தலா 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களான கணபதி சாந்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான விருதும், சுகந்திக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விருதும், வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த சத்தியக்கனி தங்கராஜூக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விருதும், வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel