21st JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் 2023
- 2015ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்தியபிரதேசத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- அதேபோல், பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- குறிப்பாக ரயில்வே அமைச்சர் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோர் பகுதியில் 7 ஆயிரம் பேருடன் யோகா செய்தார். மாணவ-மாணவியரும், பொதுமக்களும், திரைத்துறை பிரபலங்களும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
- புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். லடாக்கில் உள்ள பங்கோங் டசோ ஆற்றின் அருகே பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
- காஷ்மீரில் உள்ள லேக் நகர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த யோகா நிகழ்ச்சியில் என்சிசி அமைப்பை சேர்ந்த 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
- இந்திய ராணுவம் சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு யோகா மேற்ெகாள்ளப்பட்டது. புதுடெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டார்.
- இந்திய கடற்படை சார்பில் கப்பல்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கில்டான், சென்னை, ஷிவாலிக், சனாயனா, திரிசூல், தர்காஷ், வாகிர், சுமித்திரா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட கடற்படை கப்பல்களில் வீரர்கள் யோகா செய்தனர்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பை ஏற்று, 4 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்.
- இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் 2ம் நாளின் முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஐநா தலைமையகத்தின் வடக்கு புல்வெளியில் நூற்றுக்கணக்கானோர் யோகா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- காலை 6 மணி முதலே ஏராளமான இந்திய வம்சாவளிகள், அமெரிக்கர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வரிசையில் காத்திருந்தனர். வெள்ளை நிற யோகா டிஷர்ட் மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்து, ஐநா தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மார்பளவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு சர்வதேச யோகா நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யோகா செய்தனர்.
- இதில், ஐநா சபையின் 77வது கூட்டத் தொடரின் தலைவர் சபா கொரோசி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளர் அமினா ஜே முகமது உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- புல்வெளியில் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய வீடியோக்களை ஒளிபரப்பும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. யோகா நிகழ்வை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 'நமஸ்தே' என அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.
- ஐநா தலைமையகத்தில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் அதிக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் நடைபெறும் யோகா நிகழ்வுக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- கடுமையான வறட்சி காரணமாக, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் உருகுவே நாட்டின் தலைநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அறிவித்துள்ளார்.
- தண்ணீர் பற்றாக்குறை நிலைமையை சமாளிக்கும் வகையில், இந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும், சான் ஜோஸ் ஆற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அதிபர் அறிவித்துள்ளார்.
- மேலும், தலைநகரில் உள்ள 21 ஆயிரம் குடும்பங்களுக்கு, இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் பாட்டிலுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.
- அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதிக வெப்பநிலை காரணமாக உருகுவேயில் கடந்த 7 மாதங்களாக மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், நாட்டின் 60 சதவீத நீர் ஆதாரமாக விளங்கிய அணைக்கட்டுகளிலும் தண்ணீர் வறண்டுபோனதால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன்படி இந்திய எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த அணுஉலையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் ஓராண்டாக கடும் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரால் பாகிஸ்தான் எரிசக்தி துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- மின் தடை காரணமாக வர்த்தக நிறுவனங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று கடந்த டிசம்பரில் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இச்சூழலில் அணுவுலை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.நேற்று, ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார்.
- இது அவர் விளையாடிய 200-வது சர்வதேச போட்டி. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.
- சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார். அப்போது குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தாகர்த்தார்.
- அல்-முதாவா, மொத்தம் 196 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். யூரோ கோப்பை தகுதிச் சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக தனது 197-வது சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோ விளையாடி அதை முடியடித்தார்.
- 38 வயதான ரொனால்டோ கடந்த 2003-ல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தொடங்கினார். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 123 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலிலும் அவர்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.