20th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் 2023
- சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கீதாஞ்சலி நாக்வேகர் தங்கப் பதக்கம் வென்றார். இவர், கோவா மாநிலத்தை சேர்ந்தவர்.
- ஆடவருக்கான பளுதூக்குதலில் இந்திய வீரர் விஷால் 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். அவர், ஸ்வாட் (122.50 கிலோ எடை), டெட்லிஃப்ட் (155), பெஞ்ச் பிரஸ் (85) ஆகிய பிரிவுகளில் அசத்தினார்.
- ஒருங்கிணைந்த பிரிவிலும் விஷால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 16 வயதான விஷால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
- எஸ்.பி.ஐ.,யின் நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் ஜானகிராமன், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பதவியில் சேர்ந்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை, துணை கவர்னராக சுவாமிநாதன் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எம்.கே.ஜெயின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவரது இடத்துக்கு சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- பெங்களூருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் தனது பணியைத் துவக்கிய சுவாமிநாதன், சுமார், 34 ஆண்டுகளுக்கும் மேலாக, கார்ப்பரேட் மற்றும் சர்வதேச வங்கி, சில்லரை வணிகம் மற்றும் டிஜிட்டல் வங்கி, நிதி மற்றும் உத்தரவாத செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.
- அறிவுப் பகிர்வுக்கும், புதுமையான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய அறிவுப் பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இது, சாலை வடிவமைப்பு, கட்டுமானம், சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற தலைப்புகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களுக்கு உதவிகரமாக அமையும்.
- இந்தத் தளம் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதை ஊக்குவிப்பதுடன் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
- வீடியோ பதிவுகள், பவர் பாயிண்ட் விளக்கக்காட்சிகள், மற்றும் பிடிஎஃப் கோப்புகள் வடிவில் சிறந்த நடைமுறைகளை https://ksp.nhai.org/kb/ என்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
- இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
- புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தொடர்ந்து விரைவாக மேம்படுத்தி வருகிறது.
- சாம்பல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களின் பயன்பாடு, நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் போன்றவை தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுவதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவித்து வருகிறது.
- சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு தேச வளர்ச்சிக்கு பங்களிக்க வல்லுநர்களையும் பொது மக்களையும் இந்த அறிவுப் பகிர்வுத் தளம் ஊக்குவிக்கும்.