உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023
TNPSCSHOUTERSJune 16, 2023
0
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: ஒவ்வொரு நாளும் உலகில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏராளமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
13 லட்சத்து ஐம்பதாயிரம் விபத்துகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 3,700 பேர் கார் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்நிலையில், கம்பேர் மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் ஒன்று, உலகளவில் ஓட்டுநர் தரவு மற்றும் உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜப்பான் முதலிடம்
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: ஆய்வறிக்கையின்படி, உலகின் சிறந்த திறமையான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்தியா 17வது இடம்
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: 20 நாடுகளில் நடந்த இந்த ஆய்வின் முடிவில் உலகின் சிறந்த திறமையான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது.
பாதுகாப்பான இங்கிலாந்து
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: ஜப்பான் நாட்டில் உயிரிழப்பு ஏற்படுத்தும் அளவிற்கு விபத்துகளை ஏற்படுத்தும் வித்தியாசம் என்பது ஆண் மற்றும் பெண் ஓட்டுனர்களுக்கு இடையேயான சராசரி வித்தியாசம் என்பது 2.7 ஆகும்.
பெண்களை காட்டிலும் ஆண்களே அங்கு அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சாலை விபத்துகளில் குறைந்த உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
அங்கு ஒரு லட்சம் பேரில் 6.4 பேர் மட்டுமே சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். அதிகபட்சமாக தென்னாப்ரிக்காவில், ஒரு லட்சம் பேரில் 34.9 ஆண்களும், 9.9 பெண்களும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.
மோசமான விபத்துகள்
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், மோசமான சாலை விபத்துகள் ஏற்படுவதில் இங்கிலாந்தை தொடர்ந்து ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.
அங்கு லட்சம் பேரில் 7.6 பேர் மோசமான விபத்தில் சிக்குகின்றனர். இந்த பட்டியலில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மோசமான தென்னாப்ரிக்கா
உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை 2023 / GLOBAL CAR ACCIDENT REPORT 2023: விபத்து ஏற்படுத்துவதில் பாலின அளவில் அதிக வித்தியாசம் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென்னாப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகப்படியான விபத்தில் ஈடுபடுகின்றனர். இந்த பட்டியலில் பிரேசில், கொலம்பியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்த பட்டியல் என்பது பாலினம் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல எனவும், விபத்துகள் ஏற்படுவது என்பது அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் வேறுபடும் என்றும், இந்த ஆய்வை நடத்திய கம்பேர் மார்க்கெட் ஆஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ENGLISH
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: As the number of cars in the world continues to increase every day, the number of people killed in road accidents worldwide continues to increase every year.
13 lakh fifty thousand accidents take place worldwide every year. Under this, about 3,700 people die in car accidents every day. In this case, a company called Compare Market Australia has released a report on global driving data and car accidents worldwide.
Japan tops
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: According to the report, Japan tops the list of countries with the world's most skilled drivers, followed by the UK, the Netherlands, Germany, Canada and Spain.
India is ranked 17th
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: India ranks 17th in the list of countries with the most skilled drivers in the world at the end of this study of 20 countries.
Safe England
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: The difference in fatal accidents in Japan is 2.7 on average between male and female drivers. Men cause more accidents there than women.
England tops the list of countries with the lowest number of road accident fatalities. There only 6.4 people die in road accidents out of 100,000 people. In South Africa, 34.9 men and 9.9 women die in road accidents per 100,000 people.
Bad accidents
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: When comparing European countries, Germany has the second worst road accident rate after the UK. There, 7.6 out of 100,000 people have serious accidents. The list is followed by Spain and the Netherlands.
Poor South Africa
GLOBAL CAR ACCIDENT REPORT 2023: South Africa tops the list of countries with the highest gender gap in accident rates. There, men are more involved in accidents than women.
The list is followed by Brazil, Colombia and India. Compare Market Australia, which conducted the survey, said the list was not gender-specific and that accidents would vary based on their experience.