1st JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி
- மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது. இதில்,சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது.
- இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2022ம் ஆண்டு மே மாதம் வசூல் ஆன ஜிஎஸ்டியை விட 12 சதவீதம் அதிகம் ஆகும்.தொடர்ந்து 14 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஆனது ரூ.1.4 லட்சம் கோடி, தொடர்ந்து 5 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியையும் தாண்டி உள்ளது.
- அதே போல் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.
- தமிழகத்தில் தமிழகத்திலும் ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்தாண்டை விட 13 சதவீதம் அதிகரித்து இந்தாண்டு மே மாதம் ரூ.8,953 கோடி வசூல் ஆகி உள்ளது.
- நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார்.
- தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து, உத்தரப் பிரதேசத்தின் ரூபைதிகா மற்றும் நேபாளத்தின் நேபாள்கன்ஜ் இடையே, சர்வதேச எல்லையில் சரக்கு மற்றும் பயணிகள் வாகன வசதிக்காக ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை காணொலி மூலம் திறந்து வைத்தனர். அதேபோல், பீகாரின் பத்னாகா மற்றும் நேபாளம் இடையே சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர்.
- எஸ்.எப்.சி., ரக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அக்னி- 1 ஏவுகணை சோதனை இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் ஏவு தளத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது.