15th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
- பல்வேறு நவீன சிறப்பு வசதிகளை கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையை நேற்று மாலை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- அதன்பின், அந்த வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில், துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, பொதுப்பணித்துறை செயலர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையிலும், தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் தனியார் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் 1035 எண்ணிக்கையிலான 5/7.5 டன் வானொலி ஒலிபரப்பு தொலைத்தொடர்பு உபகரண பெட்டகங்களை கொள்முதல் செய்தற்காக ஹைதராபாத்தில் உள்ள ஐசிஓஎம்எம் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 15 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகும். நடப்பு 2023-24ம் நிதியாண்டில் இருந்து பெட்டகங்களின் விநியோகம் தொடங்கும். இது இந்திய ராணுவத்தின் மொபைல் தொலைத் தொடர்பின் நீண்டகால தேவையை நிறைவேற்றும்.