Type Here to Get Search Results !

14th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்
  • தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற நிலையில், திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கடந்த 2021 ஜூன் 14ம் தேதி நியமிக்கப்பட்டார். 
  • ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஓராண்டாக இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
  • இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனை மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. 
  • இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். அவர், மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
சி.பி.ஐ விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம்
  • 'மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) விசாரணை நடத்துவதாக இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என 1946 டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
  • கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டில் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கு என வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற ஆணையிடப்பட்டு உள்ளது.
  • இனி புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • இது போன்ற ஆணையை ஏற்கனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பிறப்பித்துள்ளன.
2023 மே மாதத்தில் மொத்த விலை குறியீடு -3.48% ஆக வீழ்ச்சி
  • அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்கம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 மே மாதத்தில் -3.48% (தற்காலிகமானது) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் இது -0.92% ஆக இருந்தது. 
  • கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு உற்பத்திப் பொருட்கள், ஜவுளி, உணவு அல்லாத பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி பணவீக்க விகிதம் சரிந்ததற்கு காரணமாகும். 
  • இந்தப் பணவீக்க விகிதம் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2023 ஏப்ரல் மாதத்தை விட, மே மாதத்தில் மொத்த விலை குறியீடு -0.86% ஆக குறைந்தது.
‘ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின்’ மூன்றாவது கூட்டம் 2023 ஜூன் 14 அன்று புனேவில் நிறைவடைந்தது
  • ‘ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின்’ மூன்றாவது கூட்டம் 2023 ஜூன் 14 அன்று புனேவில் நிறைவடைந்தது. உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாடு, உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி ஆகியவை இந்த 3 நாள் கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தன. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது.
  • ஜூன் 12, 13 தேதிகளில் நடைபெற்ற உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் 250-க்கும் அதிகமான பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டனர். இவர்களில் 50 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகளும் அடங்குவர். 
  • 200-க்கும் அதிகமானோர் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். இந்தப் பணிக் குழுக் கூட்டத்தின் போது வெற்றிகரமான டிஜிட்டல் தேர்வுகள் அமலாக்கத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா, சியரா லியோன், சுரிநாம், ஆன்ட்டிகுவா, பர்புடா ஆகிய நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் உலகளாவிய 60 நிபுணர்கள் பங்கேற்று 10 முக்கியமான அமர்வுகளில் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இந்த அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டவற்றை https://www.indiastack.global/global-dpi-summit/ என்ற இணையதளத்தில் காணலாம்.
  • ஜூன் 12 முதல் 14 வரை உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி நடைபெற்றது. டிஜிட்டல் அடையாளம், விரைவு பணப்பரிவர்த்தனை, டிஜிலாக்கர், மண்வள அட்டை, தேசிய இ-வேளாண் சந்தை, டிஜிட்டல் முறையில் மொழிமாற்றம் போன்ற 14 அனுபவத் தளங்களில் டிஜிட்டல் கட்டமைப்பின் வெற்றிகரமான அமலாக்கம் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. புனே நகரைச் சேர்ந்த தொழில்முறையாளர்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், உள்பட ஏராளமானோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
  • டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தை 2023 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel