UWSA செயலி / UWSA APP: தமிழ்நாட்டில் பிளம்பர், கொத்தனார், தச்சுவேலை, சமையல், ஓட்டுநர், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், போன்றவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள். இவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு மாத ஊதியம் இல்லை. இவர்களுக்கு சில நாட்கள் வேலை இருக்கும், சில நாட்கள் வேலை இருக்காது. இப்படியான சூழலில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நல வாரியங்கள் வாயிலாக ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல்ல முறையில் வேலைவாய்ப்புகள் பெற வேண்டும். சரியான ஊதியம் பெற வேண்டும். பணி பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், அரசு புதிதாக ஒரு ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களை தேர்வு செய்யும் வகையில் UWSA என்ற புதிய ஆப்பை தமிழக அரசு செய்துள்ளது. பிளம்பர், கொத்தனார், வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அரசு இந்த ஆப்பை கொண்டு வந்துள்ளது.
UWSA என்று அழைக்கப்படும் இந்த ஆப் ஆன்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைக்கு பதிவு செய்ய முடியும்.
3 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இச்செயலி மூலம் சேவையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. UWSA ஆப் மூலம் ஓட்டுனர்கள், தச்சு, கார்பெண்டர், பிளம்பர் போன்றவற்றின் சேவைகளை பொதுமக்களும் பெறலாம்.
ENGLISH
UWSA செயலி / UWSA APP: Plumbers, masons, carpentry, cooks, drivers, agricultural laborers etc. work on daily wage basis in Tamil Nadu. They are called unorganized workers. They have no monthly salary.
Some days they have work and some days they don't. In such an environment, assistance including pension and stipend is being provided through welfare boards to protect the welfare of unorganized workers.
Unorganized workers in Tamil Nadu should get decent jobs. To be paid properly. In order to get job security, the government has introduced a new app.
In this situation, the Tamil Nadu government has made a new app called UWSA to select the unorganized workers. The government has brought this app to recruit people for plumber, mason, jobs.
Called UWSA, the app is available on the Android platform and unorganized workers can register for jobs.
The government has decided to implement the service through this system on a trial basis in 3 districts. Public can also avail the services of Drivers, Carpenter, Carpenter, Plumber etc through UWSA app.