22nd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம்
- ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரா் பெக்கி விட்ஸனுடன் வா்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபா் ஜான் ஷாஃப்னா், சவூதி அரேபிய விண்வெளி வீரா் அலி அல்-காா்னி, வீராங்கனை ரயானா பா்னாவி ஆகியோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கின்றனா்.
- இவா்களில் ரயானா பா்வானிதான் விண்வெளிக்குச் செல்லும் சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 10 நாள்கள் இருந்துவிட்டு அவா்கள் பூமி திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜி-7 உச்சி மாநாடு, குவாட் அமைப்பின் மாநாட்டை முடித்துக் கொண்டு, பப்புவா நியு கினி சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இந்நிலையில், மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சசீந்திரன் மற்றும் அவரின் மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறள் என்பது உலகின் தலைசிறந்த படைப்பு என்று புகழ்ந்தார்.
- முன்னதாக, பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே மற்றும் பிரதமர் மோடியின் அரசு ரீதியிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
- பின்னர் நடந்த 3ஆவது இந்திய பசிபிக் தீவுநாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில், கூக் தீவுகள், பிஜி, கிரிபாடி, மார்ஷல் தீவுகள் குடியரசு, மைக்ரோனேசியா, நவுரு, நியு, பலாவ், பப்புவா நியூ கினி, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, துவாலு, வனுவாட்டு ஆகிய 14 பசிபிக் தீவு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, காலநிலை மாற்றம், வறுமை, பசி, இயற்கை பேரிடர்கள் என உலகம் முழுவதும் சவால்கள் நிறைந்திருப்பதாகவும், எரிபொருள், உணவு, உரம், மருந்து உள்ளிட்ட துறைகளில் பரவலான விநியோகம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் கூறினார்.
- அவரை தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, பிரதமர் மோடியை, பசிபிக் தீவு நாடுகளின் தலைவராக கருதுவதாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் தலைமைக்கு பின்னால் அணி திரள்வதாகவும் கூறினார்.
- பின்னர், சாலமன் தீவுகள், ஃபிஜி, கூக் தீவுகள், கிரிபாடி, மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக பிரதமர் மோடிக்கு "தி கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி என்ற விருதை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார்.
- பிஜி குடிமக்கள் இல்லாத ஒருவருக்கு அளிக்கப்பட்ட அரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதே போல், பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினி விருது வழங்கியது. அந்நாட்டைச் சார்ந்திராத மிகச் சிலரே இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் உள்ள ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு அதன் கொள்கை அறிக்கையின் முக்கிய பரிந்துரை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களின் முதல் வரைவை வெளியிட்டுள்ளது.
- ஆர்வமுள்ளவர்கள் ஸ்டார்ட்அப்20-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவுக் கொள்கை அறிக்கையைக் காணலாம். https://www.startup20india2023.org. என்ற இணைப்பில் இந்த ஆவணம் பொதுப்பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
- 2023 மே 27-ம் தேதி வரை இந்த வரைவுக் கொள்கை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இந்த கொள்கை அறிக்கையின் இறுதிப் பதிப்பு, உலகம் முழுவதிலும் இருந்து வந்த மதிப்புமிக்க உள்ளீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
- ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு என்பது ஜி-20 கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு பிரத்யேக தளமாகும். இது உரையாடலை எளிதாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு, உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த முயற்சிக்கிறது.
- கேரளாவின் மூணாறில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் நடைபெற்ற இரண்டாவது சிந்தன் சிபிர் கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் பசுமைக் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் டிஜிட்டல் மயமாக்கலை மையமாகக் கொண்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பசுமைக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு 30% நிதி உதவி வழங்குவது; பசுமை இழுவை மாற்றும் திட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு துறைமுகம், வ.உ. சிதம்பரனார் துறைமுகம், பாரதீப் துறைமுகம் மற்றும் தீனதயாள் துறைமுகம், காண்ட்லா துறைமுகம் ஆகியவை தலா இரண்டு இழுவைக் கப்பல்களை வாங்கும்.
- தீனதயாள் துறைமுகம், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை பசுமை ஹைட்ரஜன் மையமாக உருவாக்கப்படும்; ஆறு மற்றும் கடல் பயணங்களை எளிதாக்கவும் கண்காணிக்கவும் ஒற்றை சாளர தளத்தை உருவாக்குவது;
- ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகங்களை அடுத்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றுவது ஆகிய 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.