Type Here to Get Search Results !

8th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023க்கான வீரன் சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார்.
  • 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, பல்வேறு தேசிய சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகையாக 1,594 பேருக்கு ரூ.43 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 
  • அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டம்
  • புதுதில்லியில் நடைபெற்ற நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். 
  • 2023-24-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • பொது மக்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையவும் அவர்களின் நிதித் தேவைகளை சரியான முறையில் அணுகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் உதவும்.
  • இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்தின் மீதான விளைவுகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான தயார் நிலை, இணக்கச் சுமைகளைக் குறைத்தல், முறைப்படுத்துதலின் தரத்தை மேம்படுத்துதல், பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன் அளவுகளை முறைப்படுத்துதல், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்ற பொருள்படும் கேஒய்சி விதிமுறைகளை எளிதாக்குதல், அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், காப்பீடுத் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஸ்மார்ட் திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஆணையத்துடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து ஜேஐசிஏவுடன் கையெழுத்து
  • மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் இயக்கப்படும் நிலையங்களில் மேம்பாட்டு பணிக்காக ஸ்மார்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களின் பொருளாதார நடவடிக்கைகளையும், சம்பந்தப்பட்டவர்களின் வசதியை மேம்படுத்தவும் இது வகை செய்யப்பட்டுள்ளது. 
  • மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உள்ள 12 ரயில் நிலையங்களில் குஜராத்தில் சபர்மதி, சூரத் ரயில் நிலையங்களுக்காகவும், மகாராஷ்டிராவில் விரார், தானே ரயில் நிலையங்களுக்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டுள்ளது.
  • தில்லி, அகமதாபாத், மும்பையில் ஸ்மார்ட் திட்டத்திற்காக தொடர் கருத்தரங்குகள் மற்றும் கள ஆய்வுகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் குஜராத், மகாராஷ்டிரா அரசுகள், ஜேஐசிஏ ஏற்பாடு செய்துள்ளது. 
  • இதன் முதல் கருத்தரங்கம் புதுதில்லி நிர்மான் பவனில் மே 8, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜப்பான் தூதரகம், ஜேஐசிஏ தலைமையகம், ஜேஐசிஏ இந்திய அலுவலகம், ஜேஐசிஏ நிபுணர்கள் குழு, ரயில்வே அமைச்சகம், தேசிய அதிவேக ரயில் கழக நிறுவனம், மத்திய வீட்டுவசதி மற்றும் நுகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், டிசிபிஓ ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel