Type Here to Get Search Results !

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை 2022 - 2023 / GSDP REPORT ON 2022 - 2023

  • மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை 2022 - 2023 / GSDP REPORT ON 2022 - 2023: 2022-23 ஆம் நிதியாண்டில், தென் மாநிலங்கள், GSDP எனப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது இந்திய நாட்டுக்கு அளிக்கும் பங்களிப்பு குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
  • அந்த தரவுகளின் அடிப்படையில், GSDP, ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாகும்.
  • தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து தென் மாநிலங்கள், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதுடன், மேற்கண்ட ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் GSDP தரவுகள் அடிப்படையில், 2023 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு 24.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்தி கொண்ட மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 
  • கர்நாடக மாநிலம் 22.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், தெலங்கானா 13.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது. 13.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திர மாநிலம் 4 ஆம் இடத்திலும், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் கேரளா 5 ஆம் இடத்திலும் உள்ளது.
  • தனிநபர் வருமானத்தில், 2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, 2 லட்சத்து 75 ஆயிரத்து 443 ரூபாயுடன் தெலங்கானா முதலிடத்திலும், 2 லட்சத்து 65 ஆயிரத்து 623 ரூபாயுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 131 ரூபாயுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது. 
  • கேரளாவில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 601 ரூபாயாக உள்ளது. ஆந்திராவில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 771 ரூபாயாக உள்ளது. இந்திய அளவில் தனி நபர் சராசரி வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 7 ரூபாயாக உள்ளது. தென் இந்திய மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை கடன் - GSDP விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, தெலங்கானா - 25.3 சதவீதம், கர்நாடகா - 27.5 சதவீதம், தமிழ்நாடு - 27.7 சதவீதம், ஆந்திரா - 32.8 சதவீதம், கேரளா - 37.2 சதவீதம் என உள்ளது. நிதி ஆரோக்கியத்தில் தெலங்கானா முதலிடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
  • தென்னிந்தியாவில், அதிக வரி வருவாய் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் வரி வருவாய் 1 லட்சத்து, 26 ஆயிரத்து 644 கோடி, கர்நாடகாவின் வரி வருவாய் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய், தெலங்கானாவின் வரி வருவாய் 92 ஆயிரத்து 910 கோடி ரூபாய், ஆந்திராவின் வரி வருவாய் 85 ஆயிரத்து 265 கோடி ரூபாய், கேரளாவின் வரி வருவாய் 71 ஆயிரத்து 833 கோடி ரூபாயாக உள்ளது.
  • நிதி பற்றாக்குறை அடிப்படையில் பார்த்தால், கர்நாடகாவின் நிதிப்பற்றாக்குறை - 2.8 சதவீதம், ஆந்திரா - 3.2 சதவீதம், தமிழ்நாடு - 3.8 சதவீதம், தெலங்கானா - 3.9 சதவீதம், கேரளா - 4.2 சதவீதமாக உள்ளது. குறைந்த நிதிப்பற்றாக்குறை விகிதம், மாநிலத்தின் பொருளாதார வலிமையைக் குறிக்கிறது என சொல்லப்பட்டாலும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு, செலவினங்களில் முதலீடு செய்வது முக்கிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ENGLISH

  • GSDP REPORT ON 2022 - 2023: For the financial year 2022-23, the data on the contribution of the southern states to the Gross State Domestic Product or GSDP, or India, has been released. Based on that data, GSDP is the most important metric to measure the economic growth of a state.
  • The five southern states of Tamil Nadu, Andhra Pradesh, Kerala, Telangana and Karnataka play a major role in the economic development of India, and the above five states contribute more than 30 percent of India's GDP.
  • According to RBI's GSDP data, Tamil Nadu is the most economically powerful state in South India in FY 2023 at Rs 24.8 lakh crore. Karnataka is at the second position with a value of Rs 22.4 lakh crore and Telangana is at the third position with a value of Rs 13.3 lakh crore. Andhra Pradesh is at the 4th position with a value of Rs 13.2 lakh crore and Kerala is at the 5th position with a value of Rs 10 lakh crore.
  • In terms of per capita income, as per 2022 data, Telangana is at the top with Rs 2 lakh 75 thousand 443, Karnataka is second with Rs 2 lakh 65 thousand 623 and Tamil Nadu is third with Rs 2 lakh 41 thousand 131. 2 lakh 30 thousand 601 in Kerala. 2 lakh 7 thousand 771 in Andhra Pradesh. The average income of an individual in India is 1 lakh 50 thousand 7 rupees. It is noteworthy that South Indian states are higher than the national average.
  • Looking at the state's fiscal health in terms of debt-GSDP ratio, Telangana - 25.3 percent, Karnataka - 27.5 percent, Tamil Nadu - 27.7 percent, Andhra Pradesh - 32.8 percent, Kerala - 37.2 percent. Telangana ranks first and Tamil Nadu ranks third in financial health.
  • In South India, Tamil Nadu ranks first as the state with the highest tax revenue. Tamil Nadu's tax revenue is 1 lakh 26 thousand 644 crores, Karnataka's tax revenue is 1 lakh 11 thousand 494 crore rupees, Telangana's tax revenue is 92 thousand 910 crore rupees, Andhra's tax revenue is 85 thousand 265 crore rupees, and Kerala's tax revenue is 71 thousand 833 crore rupees.
  • In terms of fiscal deficit, the fiscal deficit of Karnataka is - 2.8 percent, Andhra Pradesh - 3.2 percent, Tamil Nadu - 3.8 percent, Telangana - 3.9 percent, Kerala - 4.2 percent. Although the low fiscal deficit ratio is said to indicate the economic strength of the state, there is no denying that investment in expenditure is a key factor for the future growth of the state, say economists.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel