4th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோவாவில் தொடங்கியது
- கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ இந்தியாவின் கோவாவுக்கு வந்தார்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, 'தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு சென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.
- கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வந்தார். அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு செல்கிறார் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் உள்ளிட்டோரும் கோவாவுக்கு வந்துள்ளனர்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாங் மிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோவாவில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ஜெய்சங்கர் பேசும்போது, 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது. இந்த காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவம், இளைஞர் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன. இந்த அமைப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ரஷ்ய மொழி, மாண்டரின் மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட இருக்கிறது.
- தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே டாலர் கரன்சியில் பணப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
- குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஹத்பத்ரா பகுதியில் மயூர்பஞ்சில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தை இன்று (மே 4, 2023) தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ‘’போதைப் பழக்கம் என்பது ஒரு நோய். இது சமூகம், பொருளாதாரம், உடல் மற்றும் மனதிற்குச் சாபம். போதைப் பழக்கம் குடும்பத்திலும், சமூகத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.
- முன்னதாக, குடியரசுத் தலைவர் பஹத்பூர் கிராமத்தை அடைந்து மறைந்த ஸ்ரீ ஷயம் சரண் முர்முவுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிராமத்தில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
- நாகாலாந்து மாநிலம் திமாபூரில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சக செயலாளர் திரு.பி.பி. ஸ்வைன் தலைமையில், சுயசார்பு இந்தியா (SRI) நிதியின் கீழ், 2023 மே 4-ம் தேதியன்று BizAmp (Amplifying Business) நிகழ்ச்சி நடைபெற்றது.
- இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
- இந்த நிகழ்வில் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தின் தலைவர் டாக்டர் டானியல் கோல்ட் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாக பரஸ்பர ஒத்துழைப்புடன் தொழில்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.
- சுகாதாரம், விண்வெளி மற்றும் மின்னணுவியல், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி கருவிகள், சுற்றுச்சூழல், புவி மற்றும் பெருங்கடல் அறிவியல், நீர் உள்ளிட்ட நிலையான எரிசக்தி, சுரங்கம், கனிம வளங்கள், உலோகங்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் திட்டங்களை அமல்படுத்த இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும்.