3rd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 சதவீதம் அதிகரிப்பு
- இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 893.08 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 22.6 சதவீதம் அதிகமாகும்.
- 2018-19-ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 728.72 மில்லியன் டன்னாக இருந்தது. நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 703.21 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 15.9 சதவீதம் அதிகமாகும்.
- எஸ்சிசிஎல் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 67.14 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.
- நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் ஆண்டு நிலக்கரி உற்பத்தி இலக்கு 1012 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023-ல் மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உணவுகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- அதன்படி அனைத்து படையினருடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான விவாதத்திற்கு பிறகு உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா கேட்டுக் கொண்டதன்படி உணவுகளில் 30 சதவீதம் அளவிற்கு சிறுதானியங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உள்நாடு மற்றும் உலக அளவில் சிறுதானியங்களின் தேவையை ஏற்படுத்தி மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கவும் மத்திய அரசின் முயற்சியின் காரணமாக 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐநா அறிவித்தது.
- உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தையொட்டி, உபாஜ் என்ற கலைகளின் புதுமைக்கண்டுபிடிப்புகள் திருவிழா புதுதில்லியில் உள்ள நித்தி ஆயோக்கில் ஏப்ரல் 26, 2023 அன்று தொடங்கியது.
- காப்புரிமைகள் தலைமை கட்டுப்பாட்டாளர், வடிவங்கள் மற்றும் வர்த்தக குறியீடுகள் ஏற்பாடு செய்த உலக அறிவுசார் தின கொண்டாட்டத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- ஒரே நேரத்தில் நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம், கலைச் செயல்பாடுகளில் புதுமை கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் குறித்த குழு விவாதத்தை நடத்தியது.
- கலைஞர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், அறிவுசார் சொத்துரிமை நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.