Type Here to Get Search Results !

29th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

29th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம்

  • சென்னை விமான நிலையஇயக்குநராக இருந்த சரத்குமார் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் டெல்லியில் உள்ள தலைமை இடத்துக்கு மாற்றப்பட்டார்.
  • இந்நிலையில், சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே தீபக் டெல்லி தலைமையகத்தில் வரிவிதிப்பு பிரிவில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்கு) பணியாற்றி வந்தார். 
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்

  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவி காலம் டிசம்பர் 2021 உடன் முடிந்தது. 
  • அவரது பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு, 2022 டிசம்பரில் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த பணியிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது.
  • இதற்காக 3 பேர் பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான பட்டியல் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் கே.நாராயணசாமி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். ஓரிரு நாட்களில் துணைவேந்தராக நாராயணசாமி பொறுப்பேற்கவுள்ளார். அதற்கான பணி ஆணையை ஆளுநர் ஆர்.ரன்.ரவி, கே.நாராயணசாமிக்கு  நேரில் வழங்கினார். 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - 5 முறையாக சிஎஸ்கே சாம்பியன்
  • 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31 ம் தேதி தொடங்கி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது.
  • 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் வெற்று வாகை சூடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 'டாஸ்' வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. அதற்குள் மழையும் தொடங்கி விட்டதால் ஓவர் குறைப்பு செய்யப்பட்டது. அதன்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. த்ரில் வெற்றியை ருசித்து கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்வது இது 5வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் ரூ.818 கோடியில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
  • தமிழகத்தில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். 
  • சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள அவர், அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் நிர்வாகிகள், உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.
  • இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) சார்பில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
  • இதைத் தொடர்ந்து,  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் பரப்பில் ரூ113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய ஆலை நிறுவ கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிட்சுபா இந்தியா நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடியில் விரிவாக்கம் செய்ய மிட்சுபாவுடன் ஒப்பந்தம்.
  • தமிழகத்தில் கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதுதொடர்பான வணிகத்தை மேற்கொள்ள ஷிமிசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
  • பாலிகார்பனைட் தாள், கூரை அமைப்புகள், கட்டுமானத் துறையில் பயன்படும் எலெக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ரூஷன் லைன்கள் தயாரிக்க ரூ.200 கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவ பாலிஹோஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கோயீ நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
  • விண்வெளி, பாதுகாப்பு, கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை ரூ.200 கோடி முதலீட்டில் நிறுவ சடோஷோஜி மெட்டல் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
  • சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி, குறைகடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு நெகிழ்வு குழல்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை ரூ.150 கோடியில் நிறுவ டஃப்ல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
  • இந்த 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயிலை துவக்கினார் மோடி
  • நம் நாட்டின் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, 2019ல் அதிவேகமாக செல்லக் கூடிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது.
  • இதுவரை 17 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 18வது ரயில் சேவை நேற்று துவக்கப்பட்டது. வட கிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி நகரிலிருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி வரையிலான இந்த ரயில் சேவையை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • குவஹாத்தி ரயில் நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அசாம் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்பு
  • 'விஜிலன்ஸ் கமிஷன்' எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.இதன் கண்காணிப்பு ஆணையராக செயல்பட்டு வந்த சுரேஷ் என்.பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பரில் முடிந்தது. 
  • இதையடுத்து, பொறுப்பு ஆணையரக பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக இவர் பொறுப்பேற்றார். புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜி.எஸ்.எல்.வி' - F12 ராக்கெட்
  • நேவிகேஷன்' எனப்படும் இட தரவுகள் குறித்த தகவல்களை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமைதாக ஒன்றாக இருக்கும் நிலையில், இஸ்ரோ மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நேவிகேஷன் செயற்கைகோள் தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
  • அதன்படி NVS-01 செயற்கைக்கோள் கண்டறியப்பட்டுள்ளது. NVS-01 செயற்கைக்கோள் நேவிகேஷன் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. இது புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • மே 29 திங்கட்கிழமை காலை 10:42ல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து GSLV-F12 ராக்கெட்டில் இது விண்ணில் ஏவப்பட்டது. 
  • இதன்மூலம் கடல் சார் இருப்பிடம், விவசாய நிலங்களை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, மொபைல் போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்துறை நிறுவனங்களுக்கு தேவையான தரவுகளை பெறமுடியும் என கூறப்படுகிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel