24th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கர்நாடக பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு
- கர்நாடகாவில் கடந்த 20-ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார்.
- அவரது முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதில் பெரும்பாலானோர் கடவுளின் பெயராலும் அரசியலமைப்பு சட்டத்தின் பெயராலும் பதவியேற்றனர்.
- இந்நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கு மங்களூரு எம்எல்ஏ யு.டி.காதர் (54) வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக, மஜத தரப்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து யு.டி.காதர் பேரவைத் தலைவ ராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் அறிவித்தார்.
- கர்நாடக சட்டப்பேரவை வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பேரவைத் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். மங்களூருவில் 5 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றுள்ள யு.டி.காதர், கடந்த சித்தராமையா, குமாரசாமி அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தார்.
- எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த அவர் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டார்.
- பேரவைத் தலைவராக தேர் வான யு.டி.காதரை முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தற்காலிக பேரவைத் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா நேற்றுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் இன்று (மே 25) முதல் தனது பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரு நாடுகளுடனான தமிழகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23ம் தேதி முதல்வர் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
- 24-ம் தேதி சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.
- அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
- இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
- இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் விவரம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
- தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி சிட்னியில் ஆஸ்திரேலிய முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் உரையாற்றினார்.
- இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.
- ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் திரு டெட்ரோஸ் அதானம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
- அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, சுகாதார அவசர நிலைகளுக்கு இந்தியா, தயாராக உள்ளது என்றும், சுகாதார சேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
- இந்த மாநாட்டில் ‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு அமர்வில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, இந்த தலைப்பு ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
- மிகவும் பழைமையான மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான தேவை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.