21st May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்தில் '3HP' எனும் காசநோய் சிகிச்சைத் திட்டம் தொடக்கம்
- நெஞ்சக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, இருமல் மூலம் பரவக்கூடிய நோயாகும். எனவே, காசநோயாளிகள் இருக்கும் இல்லத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்து கொடுக்கும் 3HP எனும் சிகிச்சைத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இதை தொடங்கி வைத்தார்.
- இந்த காசநோய் சிலரில் சளி இருமல் என அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா உடலில் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
- இதனால் காசநோயாளியின் வீடுகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இனி முன்னெச்சரிக்கை மருத்துவ சிகிச்சை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 3HP எனப்படும் மருந்தை வாரத்துக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டும்.
- 2019ம் ஆண்டு 1,08,344 லட்சம் பேர், 2020-ல் 68,922 பேர், 2021ம் ஆண்டு 82,680 பேர், 2022ம் ஆண்டு 91592 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது.
- ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு காசநோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 2019ல் 91,405 பேர், 2020ல் 57,391 பேர், 2021 68,810 பேர், 2022ல் 50,592 பேர் குணமாகி உள்ளனர்.
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது.
- மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், திரு. சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள்/பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சிந்தனைக் கூட்டத்தின் முதல் நாளில், முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில், துறைமுகங்களின் புதுமையான யோசனைகள் குறித்து பெரிய துறைமுகங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒரு பிரத்யேக அமர்வு கவனம் செலுத்தியது.
- மற்றைய அமர்வில் கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியாவை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர, பல்வேறு நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
- இரண்டாம் நாள் கூட்டத்தில், முக்கிய துறைமுகங்கள் மூலம் சரக்கு கையாளுதல், துறைமுக அழைப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரப்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.