Type Here to Get Search Results !

ஜி7 உச்சி மாநாடு 2023 / G7 SUMMIT 2023

  • ஜி7 உச்சி மாநாடு 2023 / G7 SUMMIT 2023: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜி7 உறுப்பு நாடுகளை தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனியா உள்ளிட்ட 7 நாடுகளும் கலந்து கொண்டுள்ளன. 
  • ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உணவு, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட 10 அம்ச திட்டங்களை வெளியிட்டார். 
  • இதனை தொடர்ந்து இன்று 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
  • இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிற தலைவர்கள் அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
  • மேலும், அமைதி பூங்காவில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு வைத்திருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
  • இதன் ஆண்டு கூட்டம், ஆசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்தது. 

மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

  • ஜி7 உச்சி மாநாடு 2023 / G7 SUMMIT 2023: பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான முக்கிய இலக்குகளை நாம் எட்ட வேண்டும். அதன்படி, கரியமில வாயு எனப்படும் கார்பன் - டை - ஆக்சைடு வெளியேற்றுவதன் உச்சத்தை எட்டுவதை, 2025க்குள் நிறைவேற்ற வேண்டும். 
  • அதன்பின், காற்றை மாசுபடுத்தும் இந்த கரியமில வாயு வெளியிடுவதை படிப்படியாக குறைக்க வேண்டும்.வரும், 2050ம் ஆண்டுக்குள், 'நெட் ஜீரோ எமிஷன்' எனப்படும், கரியமில வாயு வெளியிடப்படுவது மற்றும் அதை வளிமண்டலம் உறிஞ்சி கொள்வது சமநிலையில் இருக்கும் இலக்கை எட்ட வேண்டும்.
  • இந்த இலக்குகளை எட்டுவதற்கு, இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும் பொருளாதார நாடுகள் உதவிட வேண்டும்.ரஷ்யாவை சார்ந்திராமல், தங்களுடைய எரிசக்தி ஆதாரத்துக்கு தேவையான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். 
  • ஆனால், நெட் ஜீரோ எமிஷன் நிலையை, 2060க்குள் எட்டுவதாக சீனாவும், 2070ம் ஆண்டுக்குள் எட்டுவதாக இந்தியாவும் ஏற்கனவே தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜி - 7 நாடுகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு, சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமே வெளிப்படுத்தும் மோசமான தலைவர்களை நாம் பெற்றுள்ளோம்.
  • அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.'மாசு ஏற்படுத்தாத எரிசக்திக்கு மாறுவதற்கான திட்டங்களை வகுக்காமல், மீண்டும் மீண்டும் சுற்றுச்சூழலை பாதிக்கும் எரிசக்தி துறையிலேயே அதிகளவில் முதலீடு செய்கின்றனர்' என, நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவுக்கு வேண்டுகோள்

  • ஜி7 உச்சி மாநாடு 2023 / G7 SUMMIT 2023: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போரை நிறுத்தும்படி, ரஷ்யாவுக்கு, அதன் நட்பு நாடான சீனா வலியுறுத்த வேண்டும்.
  • மற்ற நாடுகளின் இறையாண்மையை மதித்து சீனா நடக்க வேண்டும். ஆசிய நாடான தைவானின் தற்போதைய நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த சீனா முயற்சிக்கக் கூடாது. பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு சீனா உதவிட வேண்டும்.
  • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, 'எங்கள் நாட்டின் இறையாண்மை தொடர்பான விஷயத்தில் தலையிடுவதற்கு, வேறு எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை' என, தெரிவித்துள்ளது.

ENGLISH

  • G7 SUMMIT 2023: The G7 Summit is underway in Hiroshima, Japan. In addition to the G7 member countries, 7 countries including India, Australia and Indonesia also participated. Prime Minister Modi, who participated in the 2nd day of the G7 summit, announced 10-point plans including food, health and development. Following this, Prime Minister Modi, who participated in the program on the 3rd day, paid tribute by sprinkling flowers at Peace Park in Hiroshima.
  • Following this, Australian Prime Minister Anthony Albanese, Japanese Prime Minister Fumio Kishida and other leaders paid their respects by laying flowers at Peace Park. Also, Prime Minister Modi visited the museum at the Peace Park and signed the visitor's book kept there.
  • Its annual meeting was held in Hiroshima, Japan. 

Major decisions taken in this conference

  • G7 SUMMIT 2023: We need to meet key targets to address climate change. According to this, the peak of carbon dioxide emissions should be achieved by 2025. After that, the emission of carbon dioxide which pollutes the air should be gradually reduced. By the year 2050, called 'net zero emission', the carbon dioxide emitted and the atmosphere's absorption will be in balance.
  • To achieve these goals, major economic countries including India and China should help. The countries of the world should make necessary efforts for their energy sources without depending on Russia.
  • However, it is noteworthy that China and India have already announced that they will achieve net zero emissions by 2060 and India by 2070. This report has been published in the G-7 meeting, a report against environmental experts. 'We have bad leaders who pay lip service to environmental protection.
  • They have confirmed it again. 'They are investing more in the energy sector without making plans to switch to non-polluting energy, which will repeatedly affect the environment', experts said. 

Request to China

  • G7 SUMMIT 2023: Russia has been asked to stop the war on Ukraine, an Eastern European country. China, a friendly country, should emphasize. China should respect the sovereignty of other countries. China should not try to make any changes to the status quo of the Asian nation of Taiwan. 
  • China should help to maintain peace in the region. This is what it says. China has strongly opposed this and said that 'no other country has the right to interfere in the issue of our country's sovereignty'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel