1st May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்காக புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு
- செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்படுகளை நாசா, உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
- இந்த நிலைய்ய்ல், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் ஜூராங் ரோவரை கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.
- இந்த நிலையில், இந்த விண்கலம் ஜூராங் ரோவர் உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பின் அடுக்கிலும் நீரேறப்பட்ட சல்பேட்டடுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கான், இரும்பு ஆக்சைடு தாதுக்கள், குளோரைடுகளால் நிறைந்திருப்பதாக கண்டுபிடித்தனர்.
- அதன்மூலம், செவ்வாய் கிரகத்தில்மக்க வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
- மேலும், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற கால நிலை உள்ளதாகவும், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில், கடல் பாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலம் நம்பிக் கொண்டிருப்பதாக சீனன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- 2023 ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட இது 12% அதிகமாகும்.
- முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச், மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோன்று, ஏப்ரல் 20ந் தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்சமாக ஒரு நாள் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 57,846 கோடியாக இருந்தது.
- மொத்த ஜிஎஸ்டி வசூலில், சிஜிஎஸ்டி மூலம் ரூ. 38,440 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ. 47,412 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ. 89,158 கோடியும், செஸ் வரி மூலம் ரூ. 34,972 கோடியும் பெறப்பட்டுள்ளது.
- ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்.
- வானியலாளர்களால் உருவாக்கப்பட்ட குறைந்த விலை நட்சத்திர சென்சார் சமீபத்தில் இஸ்ரோவால் பிஎஸ்எல்வி சி-55 இல் ஏவப்பட்டது. அதன் முதல் விண்வெளி சோதனையில், பிஎஸ்எல்வி சுற்றுவட்ட சோதனைப் பகுதியில் (POEM) பொருத்தப்பட்ட இந்த சென்சார் சிறப்பாக செயல்படுகிறது.
- செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை விரைவாகக் கணக்கிட வடிவமைக்கப்பட்ட இந்த குறைந்த விலை சென்சார் முதல் முறையாக விண்வெளியில் சோதிக்கப்படுகிறது.
- எந்தவொரு விண்வெளிப் பயணத்திற்கும், எந்த நேரத்தில் செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை அறிவது முக்கியம். இதனை அறிய பல வழிகள் இருந்தாலும், இந்த நட்சத்திர சென்சார் மிகத் துல்லியமான தகவலை வழங்குகிறது.
- விண்வெளியில் இதன் செயல்திறனை மதிப்பிடுவது பிரதான நோக்கமாக இருந்த நிலையில், ஹோசகோட்டிலுள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் CREST வளாகத்தில் அமைந்துள்ள விண்வெளி அறிவியலுக்கான எம்ஜிகே மேனன் ஆய்வகத்தில் அதற்கான சோதனைகள் செய்யப்பட்டன.
- இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2023 இல் 73.02 மில்லியன் டன் என்ற அளவை எட்டியதன் மூலம் 8.67% வளர்ச்சியுடன் அதிக உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
- நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி உற்பத்தியை 17.52% அதிகரித்து 9.88 மெட்ரிக் டன்னாக ஏப்.23ல் அதிகரிக்க வழிவகுத்தது.
- மொத்த நிலக்கரி ஏற்றுமதி ஏப்.22ல் 71.99 மெட்ரிக் டன்னிலிருந்து ஏப்.23ல் 80.45 மெட்ரிக் டன்னாக 11.76% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிரதமர் விரைவு சக்தியின் கீழ் அனைத்து முக்கிய சுரங்கங்களுக்கும் ரயில் இணைப்பு உள்கட்டமைப்பை அதிகரிக்க அமைச்சகம் எடுத்த முயற்சிகள், விரைவான வெளியேற்றத்தை உறுதி செய்வதற்கு இது முக்கியமானக் காரணமாகும்.
- நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், நிலக்கரி அமைச்சகம் 29 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைந்து கணிசமான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும்.