Type Here to Get Search Results !

16th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை தியாகராய நகரில் ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைதான் கடந்து தான் செல்ல வேண்டும்.
  • இந்த நெரிசலை குறைப்பதற்காக தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதி கொண்ட இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள். பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு நியமன ஆணைகள் - பிரதமர் மோடி வழங்கினார்
  • மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பத்து லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். 
  • அதன்படி, பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். 
  • நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
  • மேலும் அஞ்சலக ஆய்வாளர்கள், தட்டச்சர், தீயணைப்ப ஊழியர், ஆடிட்டர், பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
வல்லநாடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பல்லி இனத்திற்கு "முத்து செதில் "எனப் பெயர்
  • மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  • இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு வல்லநாடு, காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். 
  • இந்த குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரமேஸ்வரன் மாரியப்பன் இருந்துள்ளார். இவர்கள் பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே புதிதாக ஒரு பல்லி இனத்தினை கண்டுபிடித்தனர். 
  • இந்த பல்லிக்கு குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ என்றும் தமிழில் முத்து செதில் பல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
  • இந்த பல்லி இனத்தைப் பொறுத்தவரை இந்திய அளவில் 53 வது பல்லி இனமாகவும், தமிழக அளவில் 7 வது பல்லி இனமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
  • இந்த அரிய வகை பல்லி இனம் தனித்துவம் வாய்ந்ததாகும். அதன் முதுகு செதில்கள், தொடைப்பகுதி வினோதமாக உள்ளது. எனவே அப்பல்லி இனத்திற்கு முத்து செதில்கள் எனப்பபெயரிடப்பட்டுள்ளது.
‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார்
  • தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதே, பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கம் என்பதால், அதனை நிறைவேற்றும் விதமாக மத்திய தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதளத்தை இன்று தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் தொலைந்து போன செல்போன்களைக் கண்ட
  • றியவும், போலி செல்ஃபோன்களை அடையாளம் காணவும் உதவும்.
  • சிஇஐஆர் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட செல்ஃபோன்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். 
  • இந்த இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel