10th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
- ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஈஸ்வரன், நாமக்கல்லில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள உருவ சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- இந்து சமய அறநிலையத் துறைசார்பில், ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடம் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ஒப்பந்த காலத்துக்கு 6 மாதம் முன்னதாக இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3 தளங்களுடன், 33,202 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.13.80கோடியில் அனைத்து வசதிகளுடன் பக்தர்கள் வரிசை வளாகமும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் ரூ.1.63 கோடியில் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்பிலான சாலை, ரயில்வே உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நத்தட்வாரா பகுதிக்கு சென்றார்.
- அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர். இந்தாண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றார்.
- நத்தட்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் அவர் வழிபட்டார். தான் செல்லும் வழியில் நின்றிருந்த மக்களை நோக்கி அவர் பூக்களை தூவினார்.
- ராஜ்சமந்த் மற்றும் உதய்பூரில் இருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கான சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் வழித்தட மாற்றுத்திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்
- இந்திய கடற்படை - தாய்லாந்தின் ராயல் தாய் கடற்படையின் 35-வது கூட்டு ரோந்து நடவடிக்கை மே 3 -ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
- இந்திய கடற்படை கப்பல் கேசரி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட எல்எஸ்டி ரக கப்பல், தாய்லாந்து கடற்படை கப்பல் சைபூரி உள்ளிட்டவை அந்தமான் கடல்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டன.
- இந்தியப் பெருங்கடல் பகுதியில் சர்வதேச வர்த்தகத்திற்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 2005- ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு கடற்படைகளும் ஆண்டுக்கு இருமுறை கூட்டு ரோந்துப்பணியை மேற்கொள்கின்றன.
- ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார்.
- துறைமுக செயல்பாடுகளில் இருந்து கழிவு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்குவதும், மறுசுழற்சியை அதிகரிப்பதும் இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
- 2022-23-ம் நிதியாண்டின் போது, செயல்பாட்டு மற்றும் நிதி அளவுருக்களில் சிறந்த செயல்திறனுக்காக பெரிய துறைமுகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- மேலும் அவை 2022-23-ம் ஆண்டில் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் துறைமுகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. முக்கிய துறைமுகங்களுக்கிடையில் நியாயமான மற்றும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, வரும் ஆண்டில் சிறப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
- 2022-23 ஆம் ஆண்டில் கப்பல்கள் துறைமுகத்தில் நுழைவதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் குறைவாக இருந்ததற்காக காமராஜர் துறைமுகம் விருது பெற்றது.
- முழுமையான செயல்திறனுக்கான விருது, 137.56 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டதற்காக காண்ட்லாவின் தீனதயாள் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது.