Type Here to Get Search Results !

UGC NET RESULT 2023: வெளியானது UGC - NET தேர்வு முடிவுகள் | செக் செய்வது எப்படி?

  • UGC NET RESULT 2023: 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி (UGC- NET Exam For Assistant Professor' as well as 'Junior Research Fellowship and Assistant Professor) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
  • .ugcnet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • நெட் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். இரண்டாவது தாளில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.
  • உதவிப் பேராசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவிப் பேராசிரியர் ஆக முடியும். இதற்கு வயது வரம்பு எதுவுமில்லை. எனினும் 30 வயது வரை மட்டுமே ஜேஆர்எஃப் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். 
  • நெட் தேர்வு என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

கொரோனா தொற்றால் தள்ளிப்போன சுழற்சி

  • UGC NET RESULT 2023: கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக (December 2021 and June 2022 (Merged Cycles)) நடத்தப்பட்டது. 
  • 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தி நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியாகின. 
  • இந்த நிலையில் கொரோனா தொற்றால் தள்ளிப்போன ஜூன், டிசம்பர் மாத சுழற்சியைச் சரிசெய்வதற்காக, 2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. 
  • குறிப்பாக பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. 83 பாடங்களுடன், இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge Systems) என்னும் பாடம் புதிதாக இருந்த முறை சேர்க்கப்ப்பட்டது. 
  • 32 ஷிஃப்டுகளில் நடத்தப்பட்ட தேர்வை 8,34,537 தேர்வர்கள் எழுதினர். நாடு முழுவதும் 186 நகரங்களில் 663 தேர்வு மையங்களில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டது. 
  • இதையடுத்து யு.ஜி.சி. நெட் தேர்வின் தற்காலிக விடைக் குறிப்பு, ஆட்சேபனை, இறுதி விடைக் குறிப்பு ஆகியவற்றை மார்ச் மாதத்தில் யுஜிசி வெளியிட்டது.
  • இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வின் (University Grants commission- National Eligibility Test -(ugc net)) 2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ளன. 

பார்ப்பது எப்படி?

  • UGC NET RESULT 2023: தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய தளத்துக்குச் செல்ல வேண்டும்.
  • அதில் UGC NET December 2022 தேர்வு முடிவுகள் என்னும் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். 
  • கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in, ugcnet@nta.ac.inஎன்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
  • அதேபோல தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். 
  • தேர்வர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel