13th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்திய அரசுப் பணிகளில் சேர 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு 'ரோஜ்கார் மேளா' திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
- இந்த திட்டத்தின்படி, மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கி வருகிறார்.
- அந்த வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 71,506 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
- நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
- இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சரான மதிவேந்தன் 7 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
- திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் 15.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் “தொழில்நுட்ப இடையீடு மற்றும் தேன்/ தேனீ வளர்ப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பயிலரங்கம் ஒன்றை 12.04.2023 புதுதில்லியில் நடத்தியது.
- தேனீ வளர்ப்புத் துறையில் ஈடுபடும் புத்தொழில் நிறுவனங்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தேனீ வளர்ப்புத் துறையின் பங்குதாரர்கள், பல்வேறு அமைச்சகங்கள்/ அரசு நிறுவனங்கள், மாநில தோட்டக்கலைத் துறை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் உட்பட சுமார் 600 பேர் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.