யு - வின் செயலி / U - WIN APP: கொரோனா தடுப்பூசி விபரங்களை அறிந்து கொள்வதற்காக, 'கோவின்' இணையதளம் உருவாக்கப்பட்டது போல், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி விபரங்களுக்காக, 'யு - வின்' என்ற செயலி சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி டோஸ் செலுத்த வேண்டிய தேதி, செலுத்தப்பட்ட தடுப்பூசியின் பெயர் ஆகிய அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம், 'கோவின்' என்ற இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதே போன்ற செயலியை, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் சோதனை முயற்சியாக நாடு முழுதும் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை 'டிஜிட்டல்' மயமாக்கும் வகையில் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன; மேலும், 2.9 கோடி கர்ப்பிணியர் உள்ளனர்.
இவர்களில் பலர் குறிப்பிட்ட நாட்களில் முறையாக தடுப்பூசி செலுத்துவது இல்லை என்ற புகார் இருக்கிறது. குறிப்பாக, மூன்று லட்சம் குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாமல் தவிர்க்கின்றனர்.
இவர்களை இலக்காக வைத்து, கண்காணித்து தடுப்பூசி செலுத்துவதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இதற்கு, 'யு - வின்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவின் போலவே இதுவும் செயல்படும்.
குழந்தைகள், கர்ப்பிணியர் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகள் முறைப்படி இதில் பதிவு செய்யப்படும்; இது, தடுப்பூசி செலுத்துவதற்கான தேதியை, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு முன்கூட்டியே நினைவுபடுத்தவதற்கு வசதியாக இருக்கும்.
இதிலிருந்து தடுப்பூசி சான்றிதழையும் பதிவு செய்ய முடியும். தடுப்பூசி செலுத்த வேண்டிய ஒருவர், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்றாலும், எங்கு உள்ளாரோ, அந்த மாநிலத்திலேயே அவருக்கு தடுப்பூசி செலுத்தவும் இந்த முயற்சி பயன்படும்.
ஒவ்வொரு கர்ப்பிணியையும் முறையாக பதிவு செய்தல், தடுப்பூசி போடுதல், அவரது பிரசவ விபரங்கள், பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி போடுதல் ஆகியவற்றுக்கு இந்த தளம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
ஒட்டு மொத்தமாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியரின் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகளை மிக எளிதாக கண்காணிக்க முடியும்.
ENGLISH
U - WIN APP: In order to learn about Corona vaccine, the 'cowin' website has been introduced as a processor test for children and pregnant vaccine.
The Ministry of Health has introduced the 'Cowin' website and processor to learn about all the details of the Corona vaccine, the date of paying the vaccine dose and the name of the vaccine. In this context, the Union Health Ministry has introduced a similar processor across the country as a test initiative to implement a vaccine for children and pregnant women.
Data for this are being collected. The project has been launched to digitize the global vaccine program.
It has been decided to improve the vaccine for children and pregnant women in our country. On average, 2.6 crore children are born each year; Also, there are 2.9 crore pregnant women.
There are complaints that many of them do not have a proper vaccine. In particular, three lakh children avoid vaccinating.
The new processor has been introduced to monitor and monitor them; It is named 'U -win'. It works just like cowin.
Dates for children, pregnant vaccine will be formally registered; This will be convenient to recall the date for the vaccine, the parents and the family.
From this it can be registered with the vaccine certificate. This effort can be used to vaccinate him in the state, even if a person who has to vaccinate, goes from one state to another.
This site is very beneficial for registration, vaccination, her delivery details, and vaccination for a newborn baby.
Overall, children and pregnant women can easily monitor the procedures related to the vaccine.