8th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அமெரிக்க தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்
- அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் ஜிம் கிளிக் ஷூட்அவுட் தடகள போட்டி நடைபெற்றது. அமெரிக்க தடகள சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்தேஜஸ்வின் சங்கர், டெகத்லானில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- டெகத்லான் என்பது உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 110 மீட்டர்தடைதாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 1500 மீட்டர் ஓட்டம் என 10 வகையிலான போட்டியைஉள்ளடக்கியது.
- இதில் தேஜஸ்வின் சங்கர் ஒட்டுமொத்தமாக 7,648 புள்ளிகளை குவித்தார். இது 2011-ம் ஆண்டு பாரதிந்தர் சிங்கின் தேசிய சாதனையான 7,658 -ஐ விட 10 புள்ளிகள் குறைவாகும்.
- சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது.
- விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
- சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை ஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- இவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் மாலையில் நடந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே ரூ.851 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. தொலைவிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், ரூ.528 கோடியில் மதுரை நத்தம் - துவரங்குறிச்சி இடையிலான 24 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- மேலும், ரூ.1,077 கோடியில் திருமங்கலம் - வடுகபட்டி இடையிலான 36 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை, ரூ.1,328 கோடியில் வடுகபட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையிலான 35.6 கி.மீ. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
- அசாம் மாநிலத்துக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார்.
- விமானப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியா தையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதன்பின் சுகோய் ரக போர் விமானத்தில் அவர் முதல் முறையாக பறந்தார். அந்த விமானத்தை, குரூப் கேப்டன் நவீன் குமார் இயக் கினார்.
- அந்த விமானம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கி.மீ வேகத்திலும் பறந்தது. சுகோய் போர் விமானத்தில் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்த குடியரசுத் தலைவர் பிரம்மபுத்ரா முதல் தேஸ்பூர் வரையில் இமயமலைப் பகுதிகளை பார்வையிட்டு பின் விமானப்படை தளத்துக்கு திரும்பினார்.
- இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் பறந்தார்.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டங்களில் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல், ஹைதராபாத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவை முக்கியமானவையாகும்.
- ரயில்வே சார்ந்த மற்ற வளர்ச்சித்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.