Type Here to Get Search Results !

தமிழ்நாடு வக்பு வாரியம் / TAMIL NADU WAQF BOARD

  • தமிழ்நாடு வக்பு வாரியம் / TAMIL NADU WAQF BOARD: இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும்.
  • இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.

அமைப்பு

  • தமிழ்நாடு வக்பு வாரியம் / TAMIL NADU WAQF BOARD: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன.
  • வக்பு வாரிய சொத்துக்களை திறமையாக நிர்வாகம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகளின் அதிகாரத்தை சட்டம் கட்டுப்படுத்துகிறது. 
  • வக்பு சட்டம் மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும் வக்பு சொத்துக்கள் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் நாடளுமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
  • இதில் சில குறைப்பாடுகள் இருந்த காரணத்தால் 1959,1964 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 
  • 1995 இல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் பரவலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது. எனவே 1955இல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்ப்படுதப்பட்டு வருகிறது.
  • மாநில அரசுகள் வக்பு வாரியங்களை அமைக்க வேண்டும் என்பது வக்ப் சட்ட நெறிமுறை வகுத்து உள்ளது. வக்பு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்பு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும் இந்த பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. 
  • இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பிஹார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், பஞ்சாப்,மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வக்ப் வாரியங்களை அம்மாநில அரசுகள் அமைத்துள்ளன.
  • புதுச்சேரி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் வக்ப் வாரியங்களை அமைத்து உள்ளன.
  • அருணாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் தாமன், தியு யூனியன் பிரதேசத்திலும் வக்பு வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.v1995 வக்பு சட்டத்தில் 83 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்பு நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
  • வக்பு நெறிமுறைகளை 14 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கை செய்துள்ளன. இதர ஆறு மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன.எஞ்சியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
  • ஒரு மாநிலத்தில் சியா பிரிவு வக்பு சொத்துக்கள் இருந்து அவர்களுக்கு தனியே வாரியம் இல்லாத பட்சத்தில் வக்பு வாரியத்தில் சியா பிரிவை சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.

பணியமைப்பு

  • தமிழ்நாடு வக்பு வாரியம் / TAMIL NADU WAQF BOARD:  வாரியத்தின் நிர்வாக அலுவலர் முதன்மை செயல்அலுவலர் ஆவார். நிர்வாக மேன்மைக்காக வாரியம் தன்னகத்தே 11 சரக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பண்ருட்டி,  சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன. 
  • ஒவ்வொரு சரகமும் ஒரு கண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது. 31 மாவட்டங்களுக்கு 33 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நிர்வாகத்தில் உள்ள வக்புகளுக்கு நிர்வாக அலுவலராக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வக்பு வாரியத்தின் பணிகள்

  • தமிழ்நாடு வக்பு வாரியம் / TAMIL NADU WAQF BOARD: ஒவ்வொரு வக்பின் தோற்றம், வருவாய், நோக்கம், பயனாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அடங்கிய பதிவுரு பேணுதல்.
  • வக்பு சொத்துக்களும், அதன் வருமானமும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணித்தல்.
  • வக்பு நிர்வாகத்திற்காக கட்டளை இடுதல்
  • வக்புகளின் நிர்வாகத்திற்காக திட்டம் தீட்டிகொடுத்தல்
  • வக்புகளின் கணக்கை தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முத்தவல்லிகள் சமர்ப்பிக்கும் வரவு-செலவை ஆய்வுசெய்து அங்கீகரித்தல்
  • வக்பு சட்டப்படி முத்தவல்லிகளை நியமித்தல் மற்றும் நீக்குதல்
  • இழந்த வக்ப் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்த்தல்
  • வக்பு மற்றும் வக்பு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடததுதல்
  • வக்பு சட்டத்திற்கு உட்பட்டு வக்பு சொத்துக்கள் விற்பனை, குத்தகை, ஒத்தி, பரிமாற்றம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல்
  • வக்பு நிதியை நிர்மாணித்தல்
  • வக்பு சொத்துக்கள் சம்பந்தமாக வாரியத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் தகவல்களை முத்தவல்லிகளிடம் கேட்டல்
  • வக்பு சொத்துக்களின் தன்மை பரப்பளவு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்தல் மற்றும் அளவை செய்தல்
  • இவற்றை தவிர அரசு வழங்கும் மானியதொகை மூலம் நலிவுற்ற வக்ப் நிறுவனங்களை பழுதுபார்ப்பதற்கும், மையவாடிகளில் சுற்றுசுவர் எழுப்புவதற்கும், உலமாக்கள் ஓய்வூதியம் வழங்குதல், 1986ஆம்ஆண்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டப்படி மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குதல் போன்ற பணிகள் வாரியம் செய்து வருகிறது.

ENGLISH

  • TAMIL NADU WAQF BOARD: Waqf is the dedication of movable and immovable property to religious (religion) related works, good causes and charitable works recognized by Islamic law.
  • Waqf organizations help in the religious, social and economic activities of Muslims. Waqf organizations also support educational institutions, hospitals and guest houses, school gates and burial grounds (dargahs).

Composition

  • TAMIL NADU WAQF BOARD: Waqf organizations were given recognition after the independence of India. Today, more than three lakh waqbs are recognized across the country.
  • The Act restricts the powers of Trustees to efficiently manage Waqf Board assets. Waqf Act The Wakf Act, 1954 was passed by the Parliament to enable Wakf Boards to function through the State Governments and carry out activities related to efficient management and administration of Wakf properties. 
  • Amendments were brought in the Act in 1959, 1964 and 1969 due to some shortcomings. In 1995, a new law covering a wide range of aspects was enacted on the basis of a report submitted on the basis of studies carried out at several levels. Therefore, the Waqf Act enacted in 2011 is being implemented in all the states of the country except Jammu and Kashmir.
  • The Waqf Act stipulates that state governments should set up Waqf Boards. The Act also mandates the inspection of waqf properties and the establishment of waqf arbitral tribunals to settle disputes relating to waqf and the appointment of inspection commissioners for these tasks. 
  • So far, state governments have set up Waqf Boards in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Kerala, Assam, Bihar, Gujarat, Haryana, Himachal Pradesh, Madhya Pradesh, Orissa, Rajasthan, Punjab, Maharashtra, Tripura, Uttar Pradesh, West Bengal and Uttarakhand.
  • The State Governments have also constituted Waqf Boards in the Union States of Puducherry, Chandigarh, Andaman and Nicobar Islands, Dadra and Nagar Haveli.
  • Arunachal Pradesh, Jharkhand, Mizoram, Nagaland, Sikkim and Union Territories of Thaman and Diu have not yet constituted Waqf Boards. Waqf Arbitral Tribunals mentioned in Section 83 of Wakf Act, 1995 have not yet been established.
  • 14 States and Union Territories have notified Waqbu norms. The other six states have only enacted regulations. The rest of the states and union territories have not taken any action in this regard. The Act states that if a state does not have a separate board for Sia Waqf properties, the Waqf Board shall include a member of the Sia sect.

Work organization

  • TAMIL NADU WAQF BOARD: The Executive Officer of the Board is the Chief Executive Officer. For administrative excellence the Board has 11 inventory offices of its own. Chennai, Tiruvallur, Kanchipuram, Vellore, Panruti, Salem, Coimbatore, Thanjavur, Trichy, Madurai, Ramanathpuram, and Tirunelveli. 
  • Each inventory is managed by a monitor. 33 inspectors have been appointed for 31 districts. Four more have been appointed as Administrative Officers for Waqfs under direct management.

Functions of Waqf Board

  • TAMIL NADU WAQF BOARD: Maintenance of register containing information regarding origin, income, purpose, beneficiaries of each Waqf.
  • Monitoring whether the Waqf assets and its income are utilized for the purpose for which they were created.
  • Laying down orders for Waqf administration
  • Planning for the administration of Waqfs
  • Arranging for auditing the accounts of waqfs and examining and approving the budgets submitted by Mutawallis.
  • Appointment and removal of mutawallis as per waqb law
  • Taking steps to recover lost Waqf properties
  • Handling cases involving waqb and waqb properties
  • Granting permission for sale, lease, transfer and transfer of Waqf properties subject to Waqf Act
  • Construction of Waqf Fund
  • Inquiring from the Trustees the information required by the Board from time to time regarding the Waqf properties
  • Investigate and decide on the nature and extent of Waqf properties and measure them
  • Apart from these, the board is doing works such as repairing the dilapidated waqb institutions, erecting perimeter walls in central wadis, providing pension to ulama, providing alimony to Muslim women divorced under the Muslim Women's Protection Act, 1986, through the grant provided by the government.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel