Type Here to Get Search Results !

5th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


5th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கேரளாவின் மீடியா ஒன் செய்தி சேனல் மீதான தடை ரத்து - உச்ச நீதிமன்ற தீர்ப்பு
 • மீடியா ஒன் செய்திச் சேனல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 
 • அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மீடியா ஒன் சேனல் விமர்சித்ததை தேச விரோதம் என்று கருதிவிட முடியாது. துடிப்பான ஜனநாயகத்துக்கு பத்திரிகை சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
 • பாதுகாப்பு அனுமதி இல்லாததால் மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
 • தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் உரிமைகளை மறுக்க முடியாது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அக்கறையற்ற வகையில் செயல்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு கேரள நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
 • மீடியா ஒன் மீதான ஒளிபரப்புத்தடை விதிக்கும் முடிவை நியாயப் படுத்துவதற்கு தேவையான எந்தவொரு உண்மையான ஆதாரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
 • அரசு நடவடிக்கைகளை பத்திரிகைகள் ஆதரிக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் நிலைப்பாட்டை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தை விமர்சித்தது மட்டுமே ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமைத்தை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது.
 • சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அறிக்கைஇயற்கை நீதி மற்றும் வெளிப்படையான நீதியின் கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
 • நீதிமன்ற விசாரணையில் எதிர் தரப்பினருக்கு தகவல்களை வெளியிடுவதில் அரசு மூடிமறைத்து செயல்பட இதனை கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ரகசியம் என்று கூறி புறந்தள்ளமுடியாது. ஏனெனில், அவை குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கின்றன. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
சென்னை ஐஐடியில் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தில் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
 • அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டமானது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் 5.1.2023 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை 6 கட்டங்களாக 250 பள்ளிகளை சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐஐடியில் அடிப்படை கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
 • சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வழங்கினார். 
 • அப்போது, சென்னை-ஐஐடிக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 • இதன்மூலம், 250 அரசு பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.
 • இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். 
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்
 • உலகின் மிக நீண்ட ரயில் பயணம் இரண்டு அல்லது நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அந்த பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். 
 • ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலிருந்து வடகொரியாவின் பியாங்யாங் (Pyongyang) நகருக்கு இடையே ஓடிய ரயிலின் பயண நேரம் இது தான்.
 • மாஸ்கோவில் இருந்து பியாங்யாங்கிற்கு செல்லும் பயணமே உலகின் மிக நீண்ட ரயில் பயணமாகும். டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கிளம்பும் இந்த ரயில் வட கொரியாவின் பியாங்யாங் வரை 10,214 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த நீண்ட பாதையில் ரயில் 16 முக்கிய ஆறுகள், 87 நகரங்கள் வழியாகச் செல்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel