27th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் - தமிழக அரசு வெளியீடு
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- அந்த புதிய விதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்ய வேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சர்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய தொழில்நுட்பக் கூட்டமைப்பு, டிராக்டர் மற்றும் இயந்திர சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பண்ணை இயந்திரத் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர் 85 சதவீத சிறு விவசாயிகள் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பங்களால் பயனடைவதாகக் கூறினார். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2014-15-ம் நிதியாண்டு முதல் 2022-23-ம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.6,120 கோடி நிதியை மாநிலங்களுக்கு விடுவித்திருப்பதாகக் கூறினார்.
- இந்த நிதி வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி வேளாண் பரிசோதனை மையம், உயர் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பண்ணை இயந்திர வங்கிகள் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.
- இந்தியா – இங்கிலாந்து இடையே 7-வது கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர்-2023” இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் ஏப்ரல் 27 முதல் மே 11,2023 வரை நடைபெறுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஜயா வாரியர் கூட்டு ராணுவப் பயிற்சி இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த முறை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சௌபாட்டியாவில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
- இப்பயிற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 ராயல் கூர்கா ஃரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், பீகார் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர்.
- இதற்காக இந்திய ராணுவ வீரர்கள் குழு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் ஏப்ரல் 26, 2023 அன்று பிரிஸ் நார்ட்டான் சென்றடைந்தனர்.